JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி
உதவி பொறியியாளர் (Assistant Engineer), டெக்னிக்கல் பணியாளர் (Technical Attendant) ஆகிய பணியிடங்களுக்கான ஆள் சேர்க்கை அறிவிப்பை இந்தியன் ஆயில் நிறுவனம் வெளியிட்டுள்ளது.காலியிடங்கள்: 56
RECRUITMENT FOR FILLING NON-EXECUTIVE VACANCIES IN PIPELINES DIVISION:


இந்தியன் ஆயில் ஆட்சேர்ப்பு 2022 முக்கியமான நாட்கள்:
ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 10.10.2022
12.09.2022 அன்று 18 வயதை கடந்த இந்தியர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். அதிகபட்சமாக 26க்கு கீழ் இருக்க வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பிற்கு மேல் பட்டியல் கண்ட சாதிகள்/ பட்டியல் கண்ட பழங்குடி வகுப்பினர் 5 ஆண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். இதர பிறப்படுத்தப்பட்ட வகுப்பினர் மூன்றாண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். நிர்ணயிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் 10 ஆண்டு வரை சலுகை பெற தகுதியுடைவராவர்.
கல்வித் தகுதி: உதவி பொறியியாளர் (எலெக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், டூல் மற்றும் இன்ஸ்ட்ருமென்டேஷன், ஆப்ரேஷன்) ஆகிய பணியிடங்களுக்கு 3 ஆண்டுகள் கொண்ட தொடர்புடைடைய பொறியியல் துறைகளில் டிப்ளமோ படிப்பு முடித்திருக்க வேண்டும்
தொழில்நுட்ப பணியாளர் இடத்துக்கு தொடர்புடைய துறைகளில் ஐடிஐ படிப்பு முடித்திருக்க வேண்டும்.
தெரிவு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, திறனறிவு தேர்வில் பெரும் மதிப்பெண்கள் அடிப்படையில் இறுதி பட்டியல் தயாரிக்கப்படும்.
சம்பளம்: உதவி பொறியாளர் பணியிடங்களுக்கு ரூ.25,000 - ரூ.1,05,000 என்ற சம்பள நிலை கடைபிடிக்கப்படும். அதை தாண்டி, அகவிலைப்படி உயர்வு, வீட்டு வாடகை கொடுப்பனவு போன்ற இதர சலுகைகள் வழங்கப்படும்.
தொழில்நுட்ப பணியாளர் பணிக்கு ரூ. 23,000 முதல் ரூ.78000 வரை இருக்கும்.
விண்ணப்பக் கட்டணம்: இதற்கான, விண்ணப்ப கட்டணம் ரூ.100 ஆகும். பட்டியல் சாதிகள், பழங்குடியினர், மகளிர் விண்ணப்பிக்க கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.
விண்ணப்பம் செய்வது எப்படி? விண்ணப்பதாரர்கள் IOCL Pipelines Recruitment Portal (https://plapps.indianoil.in/ என்ற இணையதளத்தின் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் தங்களுடைய சமீபத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் மற்றும் கையெழுத்து ஆகியவற்றை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
No comments:
Post a Comment