JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி
டிசம்பர் நடைபெற இருக்கும், எஸ்எஸ்சி ஒருங்கிணைந்த பட்டதாரி SSC CGL 2022 தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது.
கட்டணம் செலுத்தும் கடைசி தேதிகளையும் நீட்டித்துள்ளனர்.
உதவி தணிக்கை அதிகாரி/உதவி கணக்கு அதிகாரி, இளநிலை புள்ளியியல் அதிகாரி உள்ளிட்ட 35 பி, சி நிலை பதவிகளுக்கு நடக்கும் SSC CGL தேர்வுக்கான விண்ணப்பங்களுக்கு கடைசி தேதி 08/10/2022 ஆக இருந்தது. ஆன்லைன் மூலம் கட்டணம் செலுத்த 09-10-22 கடைசி தேதியாக இருந்தது. சலான் மூலம் கட்டணம் செலுத்த 10-10-2022 கடைசி தேதியாக இருந்தது.
தொழில்நுட்ப காரணங்களாலும் இணைப்பு சிக்கல்கள் இருந்ததாலும் கடந்த 2 நாட்களாக பலர் விண்ணப்பிக்க முடியாமல் சிரமப்பட்டனர். இறுதி நாளில் அதிக மாணவர்கள் உள்நுழைய முயன்றதால் ஏற்பட்ட இந்த சிக்கல்கள் காரணமாக ssc விண்ணப்பத்திற்கான கடைசி தேதியை நீடித்துள்ளது.
அதன்படி, ஒருங்கிணைந்த பட்டதாரி தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் 13-10-2022 இரவு 11.00 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஆன்லைன் மூலம் கட்டணம் செலுத்த 14-10-2022 இரவு 11.00 மணி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
வங்கிகளின் சலான் மூலம் 15-10-2022 வரை கட்டணம் செலுத்தலாம்.
விண்ணப்பத்தில் ஏதேனும் திருத்தம் இருந்தால் 19-10-2022 மற்றும் 20-10-2022 ஆகிய தேதிகளில் செய்துகொள்ளலாம்.
No comments:
Post a Comment