Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Saturday, October 29, 2022

பிளஸ் 2 தேர்வில் 60% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு HCL-லில் வேலைவாய்ப்பு


2021 அல்லது 2022ம் ஆண்டுகளில் 12ம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு HCL, தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மற்றும் தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநரகம் இணைந்து வழங்கும் வேலைவாய்ப்புடன் கூடிய ஓராண்டு பயிற்சி திட்டத்தை வழங்குகிறது.
2021-2022ம் ஆண்டு 12ம் வகுப்பில் 60% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு, HCL நிறுவனம் பயிற்சியோடு கீழ்கண்ட பணி வாய்ப்புகளை வழங்குகிறது.

தமிழக அரசின் "நான் முதல்வன்" திட்டத்தின் வாயிலாக தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம், அரசு பள்ளி மாணவர்கள் 2,000 நபர்களுக்கு HCL Techbee "Early Career Program"க்கான பயிற்சி கட்டணம் முழுவதையும் வழங்குகிறது.

இத்திட்டத்தின் வாயிலாக மாணவர்களுக்கு தமிழகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் பயிற்சியோடு HCL Technologies-ல் கீழ்க்கண்ட முழுநேர பணிவாய்ப்பை வழங்குகிறது.

Software Developer

Analyst, Design Engineer

Data Engineer

Support & Process Associate

Service Desk and DPO

1. Internship பயிற்சியின்போது 7வது மாதம் முதல், மாதம்தோறும் ரூபாய் 10,000/- உதவித்தொகையை பெறலாம்.

2. பணியில் சேர்ந்தவுடனே துவக்க நிலை ஊதியமாக ஆண்டுக்கு ரூபாய் 1.70 லட்சம் முதல் 2.20 லட்சம் வரை (பணிநிலைக்கு ஏற்றாற்போல்)

3. HCL Technologies-ல் பணிபுரிந்து கொண்டே உயர்கல்வியை துவங்குவதற்கு BITS Pilani, Amity மற்றும் SASTRA பல்கலைக்கழகங்களில் வாய்ப்பினை பெற்றுத் தருகிறது.

4. கல்விக் கட்டணத்தின் ஒரு பகுதியை HCL Technologies நிறுவனம் வழங்குகிறது. இத்திட்டமானது மாணவர்கள் சிறுவயதிலேயே உலகளாவிய தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் தங்கள் பணியினை துவங்க வாய்ப்பளிக்கிறது.

5. மாநிலம் முழுவதிலும் இந்த HCL "Techbee" திட்டத்தின் தேர்வு முகாமினை அக்டோபர் 28 முதல் 30ம் தேதி வரை, சென்னை, மதுரை, திருநெல்வேலி, திருச்சி மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

எனவே, இத்திட்டத்தில் சேர்ந்து பயன்பெறுமாறு (தகுதியுள்ள மாணவர்களை ) தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழக மேலாண்மை இயக்குநர் கேட்டு கொண்டுள்ளார்.

மேலும் விவரங்களுக்கு : சென்னை - 88079 40948. மதுரை - 9788156509. திருநெல்வேலி - 98941 52160. திருச்சி - 94441 51303. கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர் - 89032 45731, 98655 35909 என்ற எண்களில் பதிவு செய்யலாம். பதிவு செய்ய: bit.ly/HCLTB-Tamilnadu இந்த செய்தியை செய்தி மக்கள் தொடர்புத்துறை வெளியிட்டுள்ளது.

No comments:

Post a Comment