Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Saturday, October 29, 2022

13,500 பள்ளிகளில் சுற்றுச்சூழல் கல்வி திட்டம்: அமைச்சர் மகேஷ்

மேட்டுப்பாளையம்: ''தமிழகத்தில், 13 ஆயிரத்து 500 பள்ளிகளில், சுற்றுச்சூழல் கல்வி மற்றும் விழிப்புணர்வு திட்டம் துவங்கப்பட உள்ளது,'' என, கல்வித்துறை அமைச்சர் மகேஷ் கூறினார்.கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே, தென் பொன்முடியில் உள்ள ஈஸ்வரி அம்மாள் பத்திரப்பா அரசு மேல்நிலைப் பள்ளியில், தமிழக பள்ளிக் கல்வித்துறையுடன் இணைந்து, டபிள்யூ. டபிள்யூ.எப் இந்தியா நிறுவனம் (உலகளாவிய இயற்கைக்கான நிதியம்), 'மிஷன் இயற்கை' என்ற சுற்றுச்சூழல் கல்வித் திட்ட துவக்க விழா நடந்தது.அமைச்சர் மகேஷ் தலைமை வகித்து பேசியதாவது: 

சுற்றுச்சூழல் கல்வித் திட்டம், பசுமை பள்ளிகள் மற்றும் பசுமை சமூகங்களை உருவாக்குவதற்கான, ஒரு மாணவர் இயக்கம். தமிழகத்தில் உள்ள, 13 ஆயிரத்து 500 பள்ளிகளில், ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் இதில் ஈடுபடுத்தப்படுவர். சிறப்பாக செயல்படும் ஐந்து பள்ளிகள் மற்றும் 25 மாணவர்கள், முதல்வரின் விருது பெறுவர்.தமிழகம் முழுவதும், 1.76 லட்சம், இல்லம் தேடி கல்வி மையங்கள் திறக்க, இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. தற்போது, இரண்டு லட்சத்து, 2,000 மையங்கள் செயல்படுகின்றன. இதன் வாயிலாக, அரசு, அரசு உதவி பெறும், மெட்ரிக்., மற்றும் சி.பி.எஸ்.இ., பள்ளி மாணவ, மாணவியர், 34 லட்சம் பேர் பயனடைகின்றனர். இவ்வாறு, அமைச்சர் பேசினார்.

No comments:

Post a Comment