Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Saturday, October 29, 2022

மத்திய ஆயுத படைகளில் 24,369 காலி பணியிடங்கள்.. விண்ணப்பிப்பது எப்படி?

மத்திய பணியாளர் தேர்வாணையம் சார்பில் மத்திய அரசின் சிஆர்பிஎப், சிஐஎஸ்எப், பிஎஸ்எப் உள்பட பல்வேறு ஆயுத படைகளில் மொத்தம் 24,369 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.

இந்த பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாத சம்பளமாக அதிகபட்சமாக ரூ.69,100 வரை கிடைக்கும்.

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (Staff Selection Commission Or SSC) சார்பில் இந்திய ஆயுத படையில் ஏராளமான பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.

நேற்று வெளியான இந்த அறிவிப்பின் முக்கிய விபரங்கள் தொகுத்து இந்த செய்தியில் வழங்கப்பட்டுள்ளது. அதன் விபரம் வருமாறு:

மொத்த காலியிடங்கள் எவ்வளவு?

மத்திய பணியாளர் தேர்வாணையம் சார்பில் பல்வேறு ஆயுதப்படை பிரிவுகளில் Central Armed Police Forces (CAPFs) Constable (GD), SSF, Rifleman (GD) பிரிவுகளில் ஆட்சேர்ப்பு நடைபெற உள்ளது. மொத்தம் 24,369 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்கான அறிவிப்பை நேற்று மத்திய பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

எந்தெந்த பிரிவுகளில் எவ்வளவு காலியிடம்?

இந்த அறிவிப்பின்படி பிஎஸ்எப் (BSF) பிரிவில் காலியாக உள்ள 10497 இடங்களில் 8922 ஆண்கள், 1575 பெண்கள், சிஐஎஸ்எப்( CISF) பிரிவில் உள்ள 100 இடங்களில் 10 பெண்கள், 90 ஆண்கள், சிஆர்பிஎப் (CRPF) பிரிவில் காலியாக உள்ள 8911 இடங்களில் 8380 ஆண்கள், 531 பெண்கள், எஸ்எஸ்பி பிரிவில் காலியாக உள்ள 1,284 இடங்களில் 1041 ஆண்கள், 243 பெண்கள், ஐடிபிபி (ITBP) பிரிவில் காலியாக உள்ள 1613 இடங்களில் 1371 ஆண்கள், 242 பெண்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதுதவிர ஏஆர் பிரிவில் 1697 இடங்களில் ஆண்கள், எஸ்எஸ்எப்(SSF) காலியாக உள்ள 103 இடங்களில் 78 ஆண்கள், 25 பெண்களும் தேர்வு செய்யப்பட உள்ளனர். மேலும் போதை தடுப்பு பிரிவில் காலியாக உள்ள 164 இடங்களும் நிரப்பப்பட உள்ளது. இவ்வாறாக மொத்தம் 24,369 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.

கல்வி தகுதி - ஊதியம் என்ன?

விண்ணப்பதாரர்கள் மத்திய அல்லது மாநில அரசுகளால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இதில் போதை தடுப்பு பிரிவில் விண்ணப்பம் செய்வோருக்கு மாத சம்பளம் ரூ.18 ஆயிரம் முதல் ரூ.56,900 வரை கிடைக்கும். பிற பணிகளுக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாத சம்பளம் ரூ. 21,700 முதல் ரூ.69,100 வரை கிடைக்கும்.

வயது வரம்பு என்ன?

இந்த பணிகளுக்கு விண்ணப்பம் செய்பவர்கள் 18 முதல் 23 வயதுக்குள் இருக்க வேண்டும். வயது வரம்பானது 1.1.2023ம் தேதியின் அடிப்படையில் கணக்கீடு செய்யப்படும். அதன்படி விண்ணப்பம் செய்வர்கள் 2.1.2000க்கு முன்பும், 1.1.2005 பின்பும் பிறந்திருக்க கூடாது. விண்ணப்பத்தார்கள் கம்ப்யூட்டர் பேஸ்டு தேர்வு, உடல் தகுதி தேர்வு, மருத்துவ பரிசோதனை, ஆவணங்கள் பரிசோதனைகளின் அடிப்படையில் பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிப்பது எப்படி?

விண்ணப்ப கட்டணமாக ரூ.100 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பெண்கள், எஸ்சி, எஸ்டி, முன்னாள் படை வீரர்களின் வாரிசுகளுக்கு கட்டணம் கிடையாது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள்https://ssc.nic.in/என்ற இணையதளம் சென்று 2022 நவம்பர் 30ம் தேதிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணClick Here

ஆன்லைனில் விண்ணப்பம் செய்யClick Here

No comments:

Post a Comment