Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Saturday, October 15, 2022

உணவுத்துறையில் 5008 பணியிடங்கள் அமைச்சர் சக்கரபாணி தகவல்

தமிழகத்தில் உணவுத்துறை சார்பில் 5008 பணியிடங்கள் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது," என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார்.ஒட்டன்சத்திரம் கே.ஆர். அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்த சிறப்பு மக்கள் தொடர்பு முகாமில் 6024 பயனாளிகளுக்கு ரூ.11.07 கோடி அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கிய அவர் பேசியதாவது: மாவட்டத்தில் 200 ரேஷன் கடைகள் பிரிக்கப்பட்டு புதிதாக பகுதி , முழு நேர கடைகள் உருவாக்கப்பட்டுள்ளன. ஒட்டன்சத்திரம் தொகுதியில் மட்டும் 40 கடை பிரிக்கப்பட்டு புதிய கடைகள் உருவாக்கப்பட்டுள்ளன. புதிய ரேஷன் கார்டுகள் கேட்டு விண்ணப்பித்தவர்கள் தகுதி உள்ளவர்களுக்கு 15 நாட்களில் வழங்கப்பட்டு வருகிறது.

ஒன்றரை ஆண்டுகளில் தமிழகத்தில் இதுவரை 13.42 லட்சம் புதிய கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் 2.80 கோடி மரக்கன்றுகள் நடவு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் 10 லட்சம் மரக்கன்றுகள் நடவு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு நடப்பட்டு வருகிறது. உணவுத்துறை சார்பாக 5008 பணியிடங்கள் நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது,என்றார். ஆர்.டி.ஓ., சிவக்குமார், தாசில்தார் முத்துசாமி, ஒட்டன்சத்திரம் நகராட்சி தலைவர் திருமலைசாமி, துணைத்தலைவர் வெள்ளைச்சாமி, நகராட்சி கமிஷனர் தேவிகா, தி.மு.க, மாவட்ட துணை செயலாளர் ராஜாமணி, ஒன்றிய செயலாளர்கள் ஜோதீஸ்வரன், தர்மராஜன் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment