Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Wednesday, October 12, 2022

வெள்ளை முடிக்கு இனி சாயம் பூச தேவையில்லை, இந்த ஒரு இலை போதும்

நமது ஆரோக்கியம் முழுக்க முழுக்க நம் உணவைப் பொறுத்தது. தற்போதைய காலக்கட்டத்தில் ஜங்க் ஃபுட் பக்கம் மக்கள் அதிகம் சாய்ந்து கொண்டிருக்கிறார்கள்.

அது நமது ஆரோக்கியத்தையும் பாதிக்கிறது. நாம் சாப்பிடுவது நம் தலைமுடியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. முடி உதிர்தல், முன்கூட்டிய நரைத்தல், வறண்ட கூந்தல், பொடுகு போன்ற பல பிரச்சனைகளுக்கு மோசமான உணவு பழக்கம் தான் காரணமாகும். இப்பிரச்னைக்கு தீர்வு காண சந்தையில் கிடைக்கும் ஷாம்பு, கண்டிஷனர், எண்ணெய், சாயம் (டைய்) போன்றவற்றை பயன்படுத்துகிறோம். ஆனால் இவற்றில் ஆபத்தான இரசாயனங்கள் உள்ளன. இவை ஒரு பிரச்சனையை தீர்ப்பதற்கு பதிலாக, மற்றொரு பிரச்சனையை தோன்ற வைக்கும். ஆனால் இப்போது இந்த வீட்டு வைத்தியத்தை பயன்படுத்தினால் பிரச்சனைக்கு இயற்கையான தீர்வை நீங்கள் பெறலாம்.

கூந்தலின் ஆரோக்கியத்திற்கு கறிவேப்பிலை :

கறிவேப்பிலைமுடி நரைப்பதைத் தடுக்கிறது. மெலனின் இல்லாததால், முடி வெள்ளையாக மாறும். கறிவேப்பிலை முடியில் உள்ள மெலனின் குறைபாட்டை நீக்குகிறது. எனவே தலைமுடிக்கு கறிவேப்பிலையைப் பயன்படுத்துவதால் கூந்தல் பளபளப்பாகவும் மென்மையாகவும் இருக்கும்.

கறிவேப்பிலையுடன் கூடிய ஹேர் மாஸ்க்: 

கறிவேப்பிலை மாஸ்க் தயாரிக்க, உங்களுக்கு கறிவேப்பிலை, தேங்காய் எண்ணெய் , வேப்ப இலை, வைட்டமின் ஈ கேப்ஸ்யூல்கள் மற்றும் தயிர் தேவை. மாஸ்க் தயாரிக்க, கறிவேப்பிலை மற்றும் வேப்ப இலைகளை மிக்ஸியில் அரைத்து தனியாக வைக்கவும். பிறகு மற்றொரு பாத்திரத்தில் தேங்காய் எண்ணெய், வைட்டமின் ஈ கேப்ஸ்யூல் மற்றும் தயிர் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும். அதன் பிறகு இந்த கலவையை சிறிது சூடாக்கவும். ஆறிய பிறகு கறிவேப்பிலை மற்றும் வேப்ப இலை கலவையை சேர்த்து நன்றாக கலக்கவும். உங்கள் ஹேர் மாஸ்க் தயார்.

கூந்தலில் எப்படி தடவுவது: 

கூந்தலில்ஹேர் மாஸ்க்தடவுவதற்கு முன், தலையை நன்றாகக் கழுவி உலர வைக்கவும். பின் முடி மற்றும் உச்சந்தலையில் ஹேர் மாஸ்க்கை தடவவும். ஒரு மணி நேரம் கழித்து முடியை மீண்டும் கழுவவும். வாரத்திற்கு இரண்டு முறை இந்த வீட்டு வைத்தியத்தைப் பின்பற்றுங்கள், விரைவில் முடிவுகளைப் பார்க்கலாம்.

No comments:

Post a Comment