JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி
சென்னையில் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் சனிக்கிழமையன்று ( 15.10.2022) இராயப்பேட்டையில் அமைத்துள்ள நியூ கல்லூரியில் (THE NEW COLLEGE) நடைபெற உள்ளது.
ஆர்வமுள்ளவர்கள் இதில் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
சென்னை மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் (சென்னை) இணைந்து நடத்தும் இந்த முகாமில் 300-க்கும் மேற்பட்ட முன்னனி தனியார் நிறுவனங்கள் கலந்து கொள்ளவுள்ளன.
கிட்டத்தட்ட, 40,000-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் பூர்த்தி செய்யப்பட உள்ளது. இம்முகமில் எட்டாம் வகுப்பு படித்தவர்கள் முதல் பட்டப்படிப்பு வரை படித்தவர்களும். ஐடிஐ. டிப்ளமோ, நர்ஸிங் பார்மஸி மற்றும் பொறியியல் பட்டம் பெற்றவர்கள் கலந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இம்முகாமில் ஓய்வு பெற்றவர்களுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும் வேலைவாய்ப்பு அளிக்கும் நோக்கில் பல தனியார் வேலையளிக்கும் நிறுவனங்கள் கலந்து கொண்டு பல்வேறு கல்வித்தகுதிகளை உடைய பணிக்காலியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர்.
இம்முகாமில் கலந்து கொள்ள விரும்புவோர் பாஸ்போர்ட் அளவு புகைப்படம், கல்விச் சான்றிதழ், ஆதார் அட்டை ஆகியவற்றின் நகல்கள் மற்றும் கயவிவரக் குறிப்புடன் (Bio-Data) நேரில் செல்ல வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment