Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Monday, October 17, 2022

ஒரு பைசா செலவில்லாமல் குழந்தைகளின் ஞாபக சக்தியை அதிகரிக்க வழி:! ஈசி டிப்ஸ்!


பள்ளி பயிலும் மாணவர்களின் பெற்றோர்களுக்கு இருக்கக்கூடிய பெரிய கவலை என்னவென்றால் தன் குழந்தை படித்ததை விரைவில் மறந்து விடுகிறார்கள் என்பதே! இனி கவலை வேண்டாம் ஒரு ரூபாய் கூட செலவு இல்லை.உங்கள் குழந்தைகளை ஒரு ஐந்து நிமிடம் மட்டும் நேரத்தை செலவு செய்தாலே போதும். உங்கள் குழந்தைகள் ஞாபகத்திறன் மிக்கவர்களாகவும் அறிவு கூர்மையாகவும் விளங்குவார்கள்.

உங்கள் குழந்தைகளை ஞாபகத்திறன் மிக்கவர்களாக மாற்ற தினமும் ஐந்து நிமிடம் தோப்புக்கரணம் ஒன்றை போட்டால் மட்டுமே போதும் வேறு எதுவும் தேவையில்லை.
தோப்புக்கரணம் போடுவதால் நம் உடலில் நடக்கும் அறிவியல் பூர்வமான செயல்களை பற்றி தெரிந்து கொள்ளலாம்!

நீங்கள் தினமும் தோப்புக்கரணம் போடுவதன் மூலம் உங்கள் மூளையின் நியூரான் செல்கள் புத்துணர்ச்சி அடைகின்றன.இந்த நியூரான் செல்கள் புத்துணர்ச்சி அடையும் பொழுது உங்கள் உடலில் பல வியக்கத்தக்க மாற்றங்கள் நடக்கின்றன.

நாம் தோப்புக் கரணம் போடும் பொழுது நாம் காதின் நுனிகளில் ஒரு சிறிய அழுத்தம் கொடுக்கின்றோம்.
அந்த சிறிய அழுத்தமானது தொடுதல் உணர்ச்சி மூலம், நம் மூளையில் உள்ள நினைவு செல்களின் வளர்ச்சியை தூண்டுகிறது.இதனால் ஞாபக சக்தி அதிகரிப்பதோடு,அறிவு கூர்மையையும் வெளிப்படுத்தும்.

இந்த உடற்பயிற்சினை நாம் தினம் தினம் செய்யும் பொழுது நம் நினைவு செல்கள் தூண்டப்பட்டு,இந்த செல்களின் ஆற்றல் அதிகரிக்கின்றன.
இதன் காரணமாகவே தோப்புக்கரணம் பயிற்சி செய்யும் மந்த நிலையுடைய மாணவர்கள் கூட அதிக ஞாபக சக்தி உடனும் அறிவு கூர்மையுடனும் விளங்குகின்றன.எனவே தினமும் ஐந்து நிமிடமாவது உங்கள் குழந்தைகளை தோப்புக்கரணம் பயிற்சியை செய்ய வைப்பது மிகவும் நல்லதாகும்.

No comments:

Post a Comment