Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Thursday, October 13, 2022

அரசின் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளை தொடர்ந்து நடத்த வழிகாட்டல் வெளியீடு: தமிழக அரசு

சமீபத்தில் அரசுப்பள்ளி வளாகங்களில் இயங்கி வரும் 2381 அங்கன்வாடி மையங்களில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளை தொடர்ந்து நடத்துவதற்கான அறிவுரைகளை பள்ளிக்கல்வி ஆணையர் மற்றும் தொடக்க கல்வி இயக்குனர் ஆகியோர் காணொளி காட்சி வாயிலாக வழங்கியுள்ளனர். அதனை தொடர்ந்து தற்போது, வகுப்புகளை நடத்துவதற்கான வழிகாட்டுதல்கள் அறிவிப்பாக வெளியிடப்பட்டுள்ளது. அதில்;

1. 2022-2023 ஆம் கல்வி ஆண்டில் இருந்து அரசு / ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி வளாகத்திற்குள் அமைந்துள்ள 2381 அங்கன்வாடி மையங்களில் எல்கேஜி, மற்றும் யுகேஜி வகுப்புகளை தொடர்ந்து செயல்பட அரசாணை (நிலை) எண்.164 வெளியிடப்பட்டுள்ளது.

2. 2381 அங்கன்வாடி மையங்களில் எல்கேஜி, மற்றும் யுகேஜி வகுப்புகளுக்கு மையத்திற்கு ஓர் தற்காலிக ஆசிரியர் நியமிக்க
வேண்டும்.

3.இம்மையங்களில் எல்கேஜி, மற்றும் யுகேஜி வகுப்புகளை கையாள இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் பணிபுரியும் தொடக்கக் கல்வி பட்டயப்படிப்பு பயிற்சி தேர்ச்சி பெற்ற தகுதி வாய்ந்த தன்னார்வலர்களை மழலையர் வகுப்புகள் இயங்கும் பள்ளியின் மேலாண்மைக் குழுவே தேர்ந்தெடுத்து தற்காலிக ஆசிரியராக நியமிக்க வேண்டும்.

4. இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தில் தகுதி வாய்ந்த நபர் இல்லாத போது தொடக்கக்கல்வி பட்டயப்படிப்பு தேர்ச்சி பெற்ற பிற நபர்களை நியமனம் செய்ய வேண்டும்.

5. இவர்களது பணி முழுக்க முழுக்க தற்காலிகமானது.

6. இச்சிறப்பாசிரியர்களுக்கு பிழைப்பூதியம் ரூ.5000/- பள்ளிக் மேலாண்மைக்குழு மூலம் மாதம் தோறும் வழங்கலாம். இதற்கான நிதி ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மூலம் பள்ளி மேலாண்மைக் குழுவிற்கு விடுவிக்கப்படும்.

7. மேற்காண் தற்காலிக சிறப்பாசிரியர்களுக்கான பணிநேரம் காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை.

8. இத்தற்காலிக சிறப்பாசிரியர்களுக்கு ஒரு கல்வி ஆண்டிற்கு Tol முதல் ஏப்ரல் வரை 11 மாதங்கள் மட்டுமே பணிக்காலமாகும் மற்றும் பள்ளியின் கடைசி வேலை நாளன்று விடுவிக்கப்படுவர்.

9. தற்காலிகமாக தெரிவு செய்யப்பட்ட சிறப்பாசிரியர்களுக்கு எல்கேஜி, மற்றும் யுகேஜி வகுப்புகளை கையாளுவதற்கு தேவையான சிறப்பு: பயிற்சிகள் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மூலம் வழங்கப்படும்..

10.பயிற்சி நடைபெறும் நாட்கள் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம்மூலம் பின்னர்தெரிவிக்கப்படும். 11.மேற்காண் நடைமுறைகளை பின்பற்றி 14.10.2022க்குள் தற்காலிக சிறப்பாசிரியர்கள் தெரிவு செய்து பள்ளி மேலாண்மைக் குழு மூலம் நியமனம் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டுள்ளது.

No comments:

Post a Comment