Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Saturday, October 8, 2022

ஐடிஐ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் - முழு விவரம் இதோ!

ஓமன் நாட்டில் பணிபுரிய டிப்ளமோ (அ) ஐ.டி.ஐ படித்த ஆண் பணியாளர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் முறை மற்றும் விவரங்கள் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்.

அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் முனைவர். சி. என்.மகேஸ்வரன் வெளியிட்ட அறிவிப்பில் ஓமன் நாட்டில் வேலைவாய்ப்பைப் பற்றித் தெரிவித்துள்ளார்.

ஓமன் நாட்டில் Casting, Inspection, Machine Oparator பணிக்கு 2 வருடம் பணி அனுபவமுள்ள (Automobie Industry) 22 முதல் 25 வயதிற்குட்பட்ட 60 கிலோ உடல் எடைக்கு மேல் உள்ளவர்கள் மற்றும் 165 செ.மீக்கு மேல் உயரமுள்ள, டிப்ளமோ எலக்டிரிகல்/மெக்கானிக்கல் (Electrical Mechanical) மற்றும் ஐ.டி.ஐ. பிட்டர். (Fitter). டர்னர் (Turner) & வெல்டர் (Weldar) படித்த ஆண் பணியாளர்கள் தேவைப்படுகிறார்கள், மாத ஊதியமாக ரூ.35,000/- மற்றும் உணவு, இருப்பிடம், விமான பயணச்சீட்டு போன்றவை ஓமன் நாட்டில் வேலையளிப்பவரால் வழங்கப்படும்.

மேலே குறிப்பிட்டுள்ள பணிக்கு ஓமன் நாட்டிற்குச் செல்வதற்கு விருப்பமுள்ள ஆண் பணியாளர்கள் நேரிடையாகவோ அல்லது தனிநபர் மூலமாகவோ விண்ணப்பங்களை அனுப்பத் தேவையில்லை. விருப்பம் உள்ளவர்கள் www.omcmanpower.com என்ற இந்நிறுவன இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள, https://omcmanpower.com/regformmew/itiform.php என்ற இணைப்பில் பதிவு செய்து கொள்ளுமாறு முனைவர் சி. என் மகேஸ்வரன், இ.ஆய, நிர்வாக இயக்குநர் தெரிவித்துள்ளார்.

கூடுதல் விபரங்களுக்கு அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன தொலைப்பேசி எண்கள் (044-22505886/22502267) மற்றும் வாட்ஸ் ஆப் எண் (6379179200) வாயிலாக அறிந்துகொள்ளலாம்.

அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் ஒரு அரசு நிறுவனம் என்பதால் இந்த நிறுவனத்தின் கீழ் எந்த ஒரு இடைத்தரகரோ அல்லது ஏஜண்டுகளோ எவரும் இல்லை. ஆகவே விருப்பம் உள்ளவர்கள் நேரடியாகவே இந்நிறுவனத்தைத் தொடர்பு கொள்ளலாம்.

ஓமன் நாட்டிற்கு பணிபுரியச் செல்பவர்கள் விசா கிடைத்தப்பின்னர் இந்நிறுவனத்திற்கு சேவைக்கட்டணமாக ரூ 35400/- மட்டும் வரைவோலை (Demand Draft) மூலமாகக் கட்டினால் மட்டும்போதும் வேறு எந்த ஒரு கட்டணமும் இல்லை என்று அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment