Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Saturday, October 22, 2022

சிறுதானிய அதிரசம்

தேவையானவை:

சாமை அரிசி,
தினை அரிசி - தலா ½ கப்,
வெல்லம் - ¾ கப்,
வெள்ளை எள் - 2 ஸ்பூன்,
நெய் - 1 ஸ்பூன்,
ஏலத்தூள்,
சுக்குத் தூள் - 1 ஸ்பூன்,
எண்ணெய் - பொரிக்க.

செய்முறை:

சாமை, தினை அரிசியை 2 மணி நேரம் ஊறவைத்து உலர்த்தி மிக்ஸியில் அரைத்து வடிகட்டி மாவாக்கவும். அடுப்பில் கனமான பாத்திரத்தில் வெல்லத்தில் சிறிது நீர்விட்டு பாகு காய்ச்சி இறக்கி ஏலத்தூள், சுக்குத்தூள், எள் சேர்க்கவும். பின் அரைத்த மாவில் சிறிது சிறிதாக பாகில் சேர்க்கவும். சப்பாத்தி மாவு பதம் வந்தவுடன் மாவு சேர்ப்பதை நிறுத்தி நெய்யை தடவி மாவை அப்படியே வைக்கவும். மறுநாள் அந்த மாவை நெய் தடவிய வாழை இலையில் கொஞ்சம் எடுத்து அதிரசங்களாகத் தட்டி காய்ந்த எண்ணெயில் ஒவ்வொன்றாக போட்டு சுட்டு எடுக்கவும். சுவையுடன் சத்து நிறைந்தது.

No comments:

Post a Comment