Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Thursday, October 13, 2022

முதுமையை இளமையாக்கும் முருங்கைக்கீரை

முருங்கை இந்தியாவில் அனைத்து இடங்களிலும் வளருகின்ற மரம் ஆகும் இதில் காட்டுமுருங்கை, கொடி முருங்கை, தபசு முருங்கை என பல வகைகள் உள்ளன.

தமிழ்நாட்டில் வீடுகளில் யாழ்ப்பாண முருங்கை, பால் முருங்கை, சாவகச்சேரி முருங்கை, பூனை முருங்கை என்ற பல வகைகள் வளர்க்கப்படுகின்றன. இதன் சுவை கசப்பு. இது தட்பவீரியம் கொண்டது.' வெந்து கெட்டது முருங்கை,வேகாமல் கெட்டது அகத்தி'- என்று கிராமங்களில் ஒரு பழமொழி உண்டு. அதாவது முருங்கைக் கீரையை அதிகம் வேகவைத்தால் அதன் சத்துக்கள் வீணாகிவிடும். அதுபோலவே, அகத்திக் கீரை அதிக நேரம் வேகவில்லை என்றால் அதன் சத்துக்கள் நம் உடலில் சேராது. முருங்கையின் எல்லா பகுதிகளுமே பயன்படுகிறது. கண்நோய்கள், பார்வைக் குறைபாடுகளுக்கு முருங்கைக்கீரை மிகவும் சிறந்தது, அகத்தியர் தன்னுடைய பொருட்பண்பு நூலில்;

``செறிமந்தம் வெப்பந் தெறிக்குந் தலைநோய்
வெறிமூர்ச்சை கண்ணோய் விலகும்-மறமே
நெருங்கையிலை யொத்த விழி நேரிழையே!
நல்ல முருங்கையிலையை மொழி' என்கிறார்.

அதாவது, முருங்கைக்கீரையை உணவில் சாப்பிட்டுவர செரியா மந்தம், உடல் வெப்பம், நீங்கா தலை வலி, வெறிநோய், மூர்ச்சை, கண் நோய்கள், பார்வைக் குறைபாடு நீங்கும் என்று பொருள்.

100 கிராம் முருங்கைக் கீரையில் :
புரதம்-29 கிராம், கார்போஹைட்ரேட்-7 கிராம், நார்ச்சத்து-21 கிராம், வைட்டமின் ஏ, பீட்டா கரோட்டின்-450 IU, தையமின்(பி1)-1.3 மி.கி,ரிபோபிளேவின்(பி2)1.7 மி.கி, நியாசின்(பி3)-2.2 மிகி, வைட்டமின் ஈ-10.மி.கி, வைட்டமின் சி -43 மிகி,கால்சியம்-150 மிகி, இரும்புச்சத்து-175மிகி, பொட்டாசியம்-20 மிகி, துத்தநாகம்-7 மிகி, மக்னீசியம்-5.5 மிகி, பாஸ்பரஸ்-180 மி.கி என ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளன.

ஆரஞ்சுப் பழத்தைவிட அதிக வைட்டமின் சி, கேரட்டைவிட அதிக வைட்டமின் ஏ, வாழைப்பழத்தைவிட அதிக பொட்டாசியம், பால் பொருட்களைவிட அதிக கால்சியம் நிறைந்தது முருங்கைக் கீரை. உடலுக்கு அத்தியாவசியமான 20 அமினோ அமிலங்கள் முருங்கைக் கீரையில் உள்ளன.

1) முருங்கை டீ:- முருங்கை இலைகள், கருவேப்பிலை இலைகள் சம அளவில் எடுத்து நிழலில் காயவைத்து டீத்தூள் போன்று ஒன்றிரண்டாக பொடிசெய்து காற்று புகாத டப்பாவில் போட்டு வைக்கவும், தினமும் காலையில் ஒரு டீஸ்பூன் பொடியை ஒரு டம்ளர் தண்ணீரில் கொதிக்கவைத்து வடிகட்டி, சிறிதளவு தேன் கூட்டி குடித்துவர வேண்டும். சர்க்கரை நோயாளிகள் தேனைத் தவிர்க்கலாம். இந்த டீயைத் தொடர்ந்து குடித்துவந்தால், ரத்தத்தில் இரும்புச்சத்து, கால்சியம் சரிவிகிதத்தில் இருக்கும், உடல்சோர்வு, களைப்பு நீங்கி, உடலிலும், உள்ளத்திலும் உற்சாகம் பிறக்கும், சிறியவர் முதல் பெரியவர் வரை இதை அருந்துங்கள், உடலில் பிணியணுகாது பாதுகாக்கும் அட்சய மூலிகை டீ இது.

2) ஆண்மை பெருக:- முருங்கைக் கீரையின் இளந்தளிர், பூ, பிஞ்சு இவைகளை சிறு துண்டுகளாக நறுக்கி, பாலில் காய்த்து, பால் வற்றிவரும்போது, கற்கண்டு, நெய் சேர்த்து சாப்பிட்டு வந்தால் வெண்ணீர் (விந்தணுக்கள்) பெருகும், ஏழு உடற்கட்டுகளும் வன்மையடையும், ஆண்மை பெருகும்.

3) எலும்புகள் வலுவடைய:- முருங்கை இளந்தளிர், பூ, பிஞ்சு இவற்றுடன் சின்ன வெங்காயம், சீரகம், மிளகு, உப்பு, சேர்த்து நெய் விட்டு வதக்கி சாதத்தில் சேர்த்துச் சாப்பிட்டால் எலும்பை உருக்குகின்ற வெப்பம், எலும்புச்சுரம், இவை நீங்கி உடல் எலும்புகள் வன்மையடையும்.

4) தலைவலி தீர:-முருங்கை இலையுடன், மிளகு சேர்த்தரைத்து நெற்றியில் பற்றிட தலைவலி நீங்கும்.

5) கண்வலி நீங்க:-முருங்கை இலைச்சாற்றை தேனுடன் சேர்த்து கண்ணிமைகளில் போட்டுவர கண் வலி நீங்கி பார்வை ஒளி பெறும்.

6) வீக்கம் குறைய:- அடிபடுவதால் உடலில் ஏற்படும் வீக்கங்களுக்கு , முருங்கை இலையுடன், உப்பு சேர்த்து அரைத்துப் பற்றிட வீக்கம் குறைந்து வலி நீங்கும்.

7) ஹீமோகுளோபின் அதிகரிக்க:- முருங்கைக் கீரையுடன், மிளகு, சீரகம் சேர்த்து நெய் விட்டு வதக்கி சாதத்தில் சாப்பிட்டுவந்தால் ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு அதிகரித்து உடல் ஆரோக்கியத்துடன் இருக்கும்.

8) கண்பார்வை மங்கல் மாற:-முருங்கைத் தளிர் இலை, மிளகு, சின்ன வெங்காயம், சீரகம், உப்பு, சேர்த்து வதக்கி சாப்பிட்டால் கண் ஒளி கூடும், மாலைக்கண் நோய்க்கு இது ஒரு அருமருந்து.

9) கூந்தல் அடர்த்தியாக வளர:-முருங்கைக் கீரையை வாரம் இருமுறை உணவில் சாப்பிட்டு, வெளிப்பிரயோகமாக முருங்கை இலை, கருவேப்பிலை, கருஞ்சீரகம்,கார்போகரிசி சிறிதளவு சேர்த்து அரைத்து குளிப்பதற்கு ஒரு மணி நேரம் முன்பு தலையில் தேய்த்து குளித்துவந்தால் பொடுகு,தலை ஊரல் நீங்கி கூந்தல் அடர்த்தியாக கருகருவென வளரும்,இதை வாரம் ஒருமுறை செய்யலாம்.

10)முருங்கைக் கீரையில் உள்ள அமினோ அமிலங்கள் பாக்டீரியா எதிர்ப்புத் திறன் கொண்டவை,ஈ.கோலை பாக்டீரியா, சால்மோனெல்லா பாக்டீரியா இந்த பாக்டீரியாக்கள் பாதிப்பில் தீவிர எதிர்வினையாற்றும் ஆன்டி பயாடிக்-ஆக செயல்படுகிறது.

No comments:

Post a Comment