Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Thursday, October 13, 2022

2 மாதங்களில் 73,333 மத்திய அரசு பணியிடங்களை நிரப்ப எஸ்எஸ்சி திட்டம்

இந்தாண்டு இறுதிக்குள் மத்திய அரசு துறைகளில் காலியாக உள்ள 73,333 காலியிடங்களை நிரப்ப மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (எஸ்எஸ்சி) முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது.

முன்னதாக, கடந்த செப்டம்பர் மாதம் 30ம் தேதி மத்திய அரசின் அமைச்சகங்கள் மற்றும் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 73,333 காலிப் பணியிடங்கள் குறித்த விவரங்களை மத்திய பணியாளர் மற்றும் ஓய்வூதியம் அமைச்சகம் தேர்வாணையத்திடம் சமர்பித்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதில், மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் மட்டும் 28,000க்கும் மேற்பட்ட காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

இந்த 73,333 காலிப்பணியிடங்களில், சிஆர்பிஎஃப் கான்ஸ்டபிள் பதவிக்கு தேர்வின் மூலம் 24,605 காலி இடங்களும், ஆண் மற்றும் பெண் காவலர்களுக்கான (நிர்வாகம்) தில்லி காவல் 2022 தேர்வின் மூலம் 6433 காலி இடங்களும், ஒருங்கிணைந்த பட்டதாரி நிலையிலான தேர்வின் மூலம் 20,814 காலி இடங்களும், ஒருங்கிணைந்த பட்டதாரி நிலையிலான தேர்வின் 2022 மூலம் 2960 காலி இடங்களும், மத்திய ஆயுதப் படைகளில் சப் இன்ஸ்பெக்டர் தேர்வின் மூலம் 4300 காலி இடங்களும், பன்னோக்கு (தொழில்நுட்பம் சாராத) பணியாளர் மற்றும் ஹவல்தார் (சிபிஐசி & சிபிஎன்) 2022 தேர்வின் மூலம் 4682 காலி இடங்களும் நிரப்பப்பட உள்ளன.

பன்னோக்கு (தொழில்நுட்பம் சாராத) பணியாளர் மற்றும் டெல்லி காவலர் தேர்வுகளுக்கு குறைந்தபட்ச கல்வித் தகுதி 10ம் வகுப்புத் தேர்ச்சியாகும். இதர, பதவிகளுக்கு ஏதேனும் ஒரே பாடநெறியில் பட்டப்படிப்பு முடித்திருந்தால் போதுமானதாகும். எனவே, ஆர்வமும், தகுதியும் உள்ளாவர்கள் எஸ்எஸ்சி தேர்வுகள் குறித்த அறிவிப்புகளை ssc.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அவ்வப்போது பார்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

No comments:

Post a Comment