Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Monday, October 10, 2022

உங்களுக்கு இந்த அறிகுறிகள் இருந்தால் வயிற்றுப் புற்று நோய் தான்!! உடனே தெரிந்து கொள்ளுங்கள்!!


சில பிரச்சனைகள் தீவிரம் அடைவதற்கு முன்பே அதன் அறிகுறிகள் நமது உடலில் தென்படும். ஆனால் நாம் அதனை சிறு வழி தானே என்று அலட்சியம் காட்டி விடுவது மிகவும் தவறு. அவ்வாறு இந்த காலகட்டத்தில் பலர் சந்தித்து வரும் பிரச்சனை தான் புற்றுநோய். இதன் அறிகுறிகள் ஆரம்ப கட்ட காலத்தில் பெரிதாக தெரிவிக்காது. தீவிரமடையும் நேரத்தில் தான் அதிக வலியை கொடுக்கும். குறிப்பாக வயிற்றில் வரும் புற்றுநோயானது உடலில் ஆரம்பித்து கொஞ்சம் கொஞ்சமாக வெளிப்புறங்களில் பரவும் தன்மை கொண்டது. அவர் பரவும் வேளையில் வயிறு மற்றும் இன்றி இதர பாகங்களையும் பாதிப்படையும். இந்த வயிற்றுப் புற்றுநோய் இரண்டு வகைகளாக பிரிக்கலாம். ஒன்று ஆரம்ப கட்ட நிலை மற்றொன்று உச்சகட்ட நிலை.

அந்த வகையில் ஆரம்ப கட்ட நிலையில் பசி எடுப்பது குறைவாக இருக்கும்.

நீங்கள் சிறிதளவு உணவை எடுத்துக் கொண்டாலே அது அதிகமாக சாப்பிடுவது போல் இருக்கும்.

நாள் படபட உங்களது உடல் எடை குறையும்.

ரத்தம் கலந்த மலம் வெளியேறும் உடல் சோர்வு உண்டாகும் இவை எல்லாம் ஆரம்ப கட்ட நிலை.

இதுவே உச்சகட்ட நிலையில் அதீத வயிற்றுப்போக்கு அதிகப்படியான வாந்தி காணப்படும். வயிறு எப்பொழுதும் உப்பசம் ஆக இருக்கும். கண் மற்றும் தோல் பகுதிகள் மஞ்சள் நிறமாக மாறிவிடும். இதில் ஏனோ உங்களுக்கு அறிகுறி இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது.

No comments:

Post a Comment