Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Saturday, October 22, 2022

சூரிய கிரகணம்: செய்யக்கூடாதவை என்ன?? யாருக்கு தோஷம்.. ??


2022-ம் ஆண்டில் பகுதி சூரிய கிரகணம் வருகிற ஐப்பசி 08-ம் தேதி (25.10.2022) அன்று செவ்வாய்கிழமை அன்று நிகழ்கிறது.

தீபாவளிக்கு மறுநாள் அமாவாசை திதி நாளான அன்று ஸ்வாதி நக்ஷத்ரத்தில் மாலை 5.14- மணிக்கு ஆரம்பித்து மாலை 6.30 மணி அளவில் முடிவடைகிறது. கேது க்ரஸ்தமான இந்த பகுதி சூர்ய கிரஹணம் தமிழ்நாடு உள்பட இந்தியா முழுவதும் தெரியும். இந்த ஆண்டின் கடைசி சூரிய கிரகணம் இதுவே ஆகும். இந்த கிரகணத்தினால் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும்? என்னென்ன பரிகாரம் செய்ய வேண்டும்? என்னவெல்லாம் செய்யக்கூடாது என்பதை பற்றி தெரிந்துக்கொள்ளலாம்.

முதலில் சூரிய கிரகணம் என்பது, சூரியன் - சந்திரன் - பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும் போது கிரகணம் என்பது ஏற்படும். அறிவியல்படி சந்திரனானது சூரியனுக்கும் பூமிக்கும் இடையே வரும் போது சந்திரனால் சூரியன் மறைக்கப்படுவதால் பூமியில் உள்ள நம் கண்களுக்கு சூரியன் தெரியாமல் போகின்றது. இதையே சூரிய கிரகணம் என்று சொல்லப்படுகிறது. அமாவாசை நாளில் தான் இந்த சூரிய கிரகணம் நிகழும். முழுவதுமாக சூரியனை சந்திரன் மறைக்கும் போது பூமி இருளாகும் இது முழு சூரிய கிரகணம் எனப்படும்.. அதேபோல் சந்திரன் சூரியனுடைய ஒரு பகுதி மட்டும் மறைக்கும் போது ஏற்படுவது பகுதி நேர சூரியகிரகணம் ஆகும்..

இந்த சூரிய கிரகணத்தின் காரணமாக பரிகாரம் செய்து கொள்ள வேண்டிய நட்சத்திரங்கள் : திருவாதிரை, சித்திரை, ஸ்வாதி, விசாகம், சதயம்.

சூரிய கிரகணத்தின் போது , பின்பற்றவேண்டியவை :

1. கிரகணத்தை வெறும் கண்களால் பார்க்கக் கூடாது.

2. அதற்கென இருக்கக்கூடிய கண்ணாடிகளைக் கொண்டு பார்க்கலாம்.

3. கர்ப்பிணிகள் கிரகண சமயத்தில் வெளியில் செல்லக்கூடாது.

4. கிரகண நேரத்தில் உணவு சாப்பிடக்கூடாது.

5. முடிந்தவரை குலதெய்வத்தையும் - முன்னோர்களையும் - இஷ்ட தெய்வத்தையும் வணங்குதல் நலம்.

6. 1 வயதிற்கு குறைவான குழந்தைகளை வெளியில் அழைத்துச் செல்லக்கூடாது.

7. கிரகணம் முடிந்தவுடன் வீட்டினை கோமியம் - மஞ்சள் பொடி கலந்த நீரினால் சுத்தம் செய்வது நன்மை தரும்.

8. கிரகணத்திற்கு பிறகு எந்தெந்த நக்ஷத்ரகாரர்களுக்கு பிடித்திருக்கிறதோ அவர்கள் சாந்தி பரிகாரம் செய்து கொள்வது அவசியம்.

9. கிரகணம் நடக்கும் போது உணவு பொருட்களில் தர்ப்பை புல்( அருகம் புல்) போட்டு வைத்திருப்பது நலம் பயக்கும்.

10. கிரகணம் ஆரம்பிக்கும் போது தர்ப்பணம் செய்ய வேண்டும்.


கிரகண தோஷங்கள்:

1. ஜெனன கால ஜாதகத்தில் ராகு கேது இருக்கும் ராசிகளில் கிரகண தோஷம் ஏற்பட்டால் தோஷம் ஏற்படும். உதாரணமாக தற்போது ராகு மேஷ ராசியிலும், கேது துலா ராசியிலும் சஞ்சரிக்கிறார்கள். யாருக்கெல்லாம் பிறக்கும் போது ஜெனன கால ஜாதகத்தில் மேஷம் அல்லது துலாத்தில் ராகுவோ கேதுவோ இருந்தால் கிரகண தோஷம் ஏற்படும்.

2. கிரகணம் ஏற்படும் மாதங்களில் பிறந்தவர்களுக்கும் தோஷம் ஏற்படும். உதாரணமாக தற்போது கிரகணம் ஏற்படுவது ஐப்பசி மாதத்தில். எனவே யாரெல்லாம் ஐப்பசி மாதத்தில் பிறந்திருக்கிறார்களோ அவர்களுக்கு தோஷம் ஏற்படும்.

3. கிரகணம் ஏற்படும் ராசிகளில் பிறந்தவர்களுக்கு தோஷம் ஏற்படும். உதாரணமாக தற்போது கிரகணம் ஏற்படுவது ஸ்வாதி நக்ஷத்திரத்தில். எனவே துலா ராசியில் பிறந்தவர்களுக்கு தோஷம் ஏற்படும்.

4. இதைத் தவிர கிரகணம் ஏற்படும் நக்ஷத்ரத்திங்களில் பிறந்தவர்களுக்கும் அந்த நக்ஷத்திரத்தின் ஜென்மாதி ஜென்ம மற்றும் அனுஜென்ம நக்ஷத்திரத்தில் பிறந்தவர்களுக்கும் தோஷம் ஏற்படும். உதாரணமாக அக்டோபர் 25ம் தேதி நிகழக்கூடிய பகுதி சூரிய கிரகணமானது ஸ்வாதி 4ம் பாதத்திலும் பரணி 2ம் பாதத்திலும் நிகழ்கிறது. எனவே பரணி - பூரம் - பூராடம் மற்றும் திருவாதிரை - ஸ்வாதி - சதயம் ஆகிய நக்ஷத்ரகாரர்களுக்கும் தோஷம் ஏற்படும்.

இந்த மந்திரங்களைச் சொல்லலாம்..

சூரியனுடைய மந்திரமான ஆதித்யஹ்ருதயம் மற்றும் சிவனுடைய தோத்திரங்கள் - சிவபுராணம் - ருத்ரம் ஆகியவை சொல்லலாம். முடியாதவர்கள் ஓம் நமசிவாய என்ற ஐந்தெழுத்து மந்திரத்தை சொல்லலாம். மேலும் அபிராமி அந்தாதியும் சொல்லலாம்.

No comments:

Post a Comment