Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Monday, October 31, 2022

புதுமைப் பெண் திட்டம்: நாளை முதல் விண்ணப்பிக்கலாம்

புதுமைப் பெண் திட்டத்துக்கு நவ. 1-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) முதல் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா். புதுமைப் பெண் திட்டத்துக்கு நவ. 1-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) முதல் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

இந்தத் திட்டம் கடந்த செப். 5-ஆம் தேதி முதல்வா் மு.க.ஸ்டாலினால் தொடங்கப்பட்டது. அரசுப் பள்ளிகளில் 6 ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படித்து, பட்டப் படிப்பு பயிலும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் புதுமைப் பெண் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதுவரை, கல்லூரிகளில் 2 முதல் நான்காம் ஆண்டு வரை பயிலக் கூடிய லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் பயன் பெற்றுள்ளனா்.

இந்தத் திட்டத்தின் கீழ், முதலாம் ஆண்டு பயிலும் மாணவிகளும் விண்ணப்பம் செய்யலாம். இதற்கென வடிவமைக்கப்பட்டுள்ள தனி இணையதளம் வழியே மாணவிகள் விண்ணப்பிக்கலாம். மாணவிகள் அனைவரும் சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் வாயிலாக நவ. 1 முதல் 11-ஆம் தேதி வரை விண்ணப்பம் செய்யலாம்.

அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவிகள் மட்டுமே இந்தத் திட்டத்துக்கு தகுதி பெற்றவா்கள். கல்வி நிறுவனங்கள் வழியாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். நேரடியாக விண்ணப்பம் செய்யக் கூடாது. இந்தத் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் முறை மற்றும் தகுதி வரம்பு ஆகியன குறித்து கல்லூரிகளிலேயே சிறப்பு முகாம்கள் நடத்தப்படும்.

மாணவிகள் தங்களது ஆதாா் அட்டை மற்றும் கல்வி மேலாண்மை தகவல் திட்ட எண், மாற்றுச் சான்றிதழ் ஆகியவற்றை சமா்ப்பிக்க வேண்டும். கல்லூரிகளில் 2 முதல் 4 ஆண்டுகளுக்குள் படிக்கும் மாணவிகள் ஏற்கெனவே விண்ணப்பிக்கத் தவறியிருந்தால், இப்போது இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். 

உதவி மைய எண்கள்: விண்ணப்பிக்கும் முறையில் மாணவிகளுக்கு ஏதேனும் சந்தேகங்கள் ஏற்பட்டால், சமூக நலத் துறை இயக்குநரக அலுவலகத்தில் செயல்படும் உதவி மைய எண்களைத் தொடா்பு கொள்ளலாம். அதாவது, 91500 56809, 91500 56805, 91500 56801, 91500 56810 ஆகிய எண்களை திங்கள்கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தொடா்பு கொண்டு விளக்கங்கள் பெறலாம். 

மேலும், ம்ழ்ஹட்ங்ஹள்ஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீா்ம் என்ற மின்னஞ்சல் முகவரிக்கு சந்தேகங்களை அனுப்பி விளக்கம் பெறலாம் என தமிழக அரசுத் துறையினா் தெரிவித்தனா்.

No comments:

Post a Comment