Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Tuesday, October 4, 2022

"ஸ்பெஷல் கிளாஸ்".. பள்ளி மாணவர்களுக்கு பறந்து வந்த திடீர் உத்தரவு.. இனிமேல் இப்படித்தானாம்.. அதிரடி

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் ஸ்பெஷல் கிளாஸ் குறித்து, தமிழக பள்ளிக்கல்வி துறை முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

மாணவர்களின் கல்வித்திறனை கருத்தில் கொண்டு அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அத்துடன் மாணவர்களின் கல்வித் திறன்களை மேம்படுத்தவும் பல முயற்சிகளையும் எடுத்து வருகிறது அரசு.

அந்தவகையில், மாணவர்களுக்கு அதிக அழுத்தம் கொடுக்கக் கூடாது என்பதற்காக, சனிக்கிழமைகளில் வகுப்புகள் நடத்தக்கூடாது என்று உத்தரவிட்டிருந்தது..

பர்மிஷன்

ஆனால் சில நாட்களுக்குமுன்பு, தமிழக பள்ளிகளில் 10,11, 12 வகுப்புகளுக்கு சனிக்கிழமைகளிலும் சிறப்பு வகுப்பு நடத்த அனுமதி வழங்கி பள்ளிக்கல்வித்துறை திடீர் அறிவிப்பு வெளியிட்டிருந்தது.. பொதுத்தேர்வை எதிர்கொள்ளும் மாணவர்களின் நலன்களை கருத்தில் கொண்டு, 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சனிக்கிழமைகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகிறது என்றும் தமிழக பள்ளிக்கல்வித்துறை விளக்கம் கூறியிருந்தது.

ரிவிஷன் டெஸ்ட்

இந்நிலையில், சில தனியார் பள்ளிகள் மீது புகார்கள் வெடித்துள்ளன.. 1 முதல் 12ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு காலாண்டு மற்றும் முதல் பருவ தேர்வு கடந்த செப்டம்பர் மாதம் நடந்தது.. 21ம் தேதி முதல் 30-ம் தேதி வரை இந்த தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டன.. இதையடுத்து, அக்டோபர் 1-ம் தேதி முதல் காலாண்டு விடுமுறை மாணவர்களுக்கு விடப்பட்டுள்ளது...

ஸ்பெஷல் கிளாஸ்

6 முதல் 12ம் வகுப்பு வரையிலுள்ள மாணவர்களுக்கு அக்டோபர் 10ம் தேதியும், 1 முதல் 5-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு அக்டோபர் 13ம் தேதியும் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இப்படி விடுமுறையையும் அறிவித்துவிட்டு, மாணவர்களுக்கு ஸ்பெஷல் கிளாஸ்களையும் சில தனியார் பள்ளிகள் நடத்தி வருகிறதாம்.. தனியார் பள்ளிகள் சிறப்பு வகுப்புகள் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், இது குறித்து பெற்றோருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு வருவதாகவும் பள்ளி கல்வித்துறைக்கு புகார்கள் பறந்தன..

ஸ்ட்ரிக்ட் ஆர்டர்

இதையடுத்து, பள்ளி கல்வித்துறை அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதன்படி, காலாண்டு தேர்வு விடுமுறையில் பள்ளிகளை திறந்து சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது என்று கண்டிப்புடன் கூறியுள்ளது.. அப்படி ஒருவேளை, பொதுத்தேர்வு எழுதும் 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும், தேவைப்பட்டால் மாவட்டக் கல்வி அலுவலரின் அனுமதியை பெற்று சிறப்பு வகுப்பு நடத்திக் கொள்ளலாம், அதுவும் அரைநாள் மட்டுமே நடத்த வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளது.

No comments:

Post a Comment