Subscribe Us

Sunday, October 23, 2022

தீபாவளிக்கு மறுநாள் பள்ளிகளுக்கு விடுமுறை? அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி பேட்டி

தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில், அதற்கு மறுதினம், 25ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை என்று புதுச்சேரி அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் உள்ள அரசு ஊழியர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள், பெற்றோர்கள், தீபாவளிக்கு மறுநாளான 25ம் தேதி விடுமுறை அளிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இது குறித்து, திருச்சி விமான நிலையத்தில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழியிடம் நிருபர்கள் கேட்டபோது, ''வரும், 25ம் தேதி விடுமுறை அளிக்க வேண்டும்' என்று மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். எனது துறை தொடர்பான கோரிக்கையை பரிசீலிக்கும்படி முதல்வருக்கு பரிந்துரை செய்துள்ளேன். இதே கோரிக்கையை அரசு ஊழியர்களும் வைத்துள்ளனர். 

எனவே இந்த கோரிக்கையை தமிழக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. விடுமுறை குறித்து முதல்வர் விரைவில் அறிவிப்பார்' என்றார்.

No comments:

Post a Comment

Popular Feed