JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி
தமிழ்நாடு அரசின் 2023ம் ஆண்டுக்கான திருவள்ளுவர் விருது, 2022ஆம் ஆண்டுக்கான 24 வகையான விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தமிழுக்கும் தமிழ் வளர்ச்சிக்கும் பாடுபடும் தமிழறிஞர்களை சிறப்பிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு பல்வேறு விருதுகளை வழங்கிச் சிறப்பித்து வருகிறது. அவ்வகையில் தமிழ்நாடு அரசின் 2023ஆம் ஆண்டுக்கான திருவள்ளுவர் விருது மற்றும் 2022ஆம் ஆண்டுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
24 விருதுகளுக்கு வகையான திருவள்ளுவர் விருது 2023 மற்றும் 2022ஆம் ஆண்டுக்கான
இலக்கிய மாமணி விருது (3 விருதுகள்).
பேரறிஞர் அண்ணா விருது.
பெருந்தலைவர் காமராசர் விருது.
பாரதியார் விருது.
பாவேந்தர் பாரதிதாசன் விருது,
திரு. வி.க விருது,
கி.ஆ.பெ. விசுவநாதம் விருது,
தமிழ்த்தாய் விருது,
கபிலர் விருது,
உ.வே.சா விருது,
கம்பர் விருது,
சொல்லின் செல்வர் விருது.
உமறுப்புலவர் விருது,
ஜி.யு.போப் விருது,
இளங்கோவடிகள் விருது.
அம்மா இலக்கிய விருது.
சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருது (10 விருதுகள்).
சிங்காரவேலர் விருது.
அயோத்திதாசப் பண்டிதர் விருது.
மறைமலையடிகளார் விருது.
அருட்பெருஞ்சோதி வள்ளலார் விருது.
காரைக்கால் அம்மையார் விருது,
சி.பா. ஆதித்தனார் திங்களிதழ் விருது,
தமிழ்ச் செம்மல் விருதுகள் (38 விருதுகள் மாவட்டத்திற்கு ஒன்று வீதம்).
விண்ணப்பங்கள் மற்றும் அவை தொடர்பான ஆவணங்களுடன் https://awards.tn.gov.in என்ற இணைய வழி வாயிலாகவோ அல்லது இயக்குநர், தமிழ் வளர்ச்சி இயக்ககம், தமிழ்ச்சாலை, எழும்பூர், சென்னை அவர்களுக்கு 23.12.2022-க்கு முன்பாக விண்ணப்பம் வாயிலாகவோ அனுப்பிட கேட்டுக்கொள்ளப்படுகிறது. உரிய காலத்திற்குள் பெறப்படாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். விருதுக்கு தகுதியானவர்கள் தெரிவு செய்யப்பட்டு முதலமைச்சரால் விருது வழங்கப்படும். (தொ.பே.எண். 044-28190412, 044-28190413.
No comments:
Post a Comment