JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி
குரூப் 2 முதல்நிலைத் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டு, குரூப் 1 முதல்நிலைத் தேர்வு நடைபெற்று முடிந்துள்ள நிலையில், குரூப் 4 தேர்வு முடிவுகள் தொடர்பான எதிர்பார்ப்பு தேர்வர்களிடையே அதிகரித்து காணப்படுகிறது.
முன்னதாக, அரசின் பல்லவேறு துறைகளில் குரூப் 4 நிலையில் காலியாக உள்ள 7301 பணிகளுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையயம் கடந்த மார்ச் 30ம் தேதி வெளியிட்டது. இந்த குரூப் 4 தேர்வுக்கு சுமார் 16.2 லட்சம் பேர் இதற்கு விண்ணப்பித்திருந்தனர்.
கடந்த செப்டம்பர் மாதம் 24ம் நடந்த எழுத்துத் தேர்வில் கிட்டத்தட்ட 14 லட்சம் பேர்தேர் கலந்து கொண்டனர். அக்டோபர் மாதத்திற்குள் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில், தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்புகளில் மகளிருக்கான 30% இட ஒதுக்கீடு வழங்கும் முறையை மாற்ற வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. எனவே, இந்த புதிய முறையைப் பின்பற்றி குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்தது.
இந்நிலையில், தேர்வு முடிவுகள் விவர அட்டவணையை சில தினங்களுக்கும் முன்பு டிஎன்பிஎஸ்சி வெளியிட்டிருக்கிறது. அதில், டிசம்பர் மாதத்தில் குரூப் 4 மற்றும் 3 உள்ளிட்ட எழுத்துத் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

எழுத்துத் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு, தேர்வாணையம் அவர்கள் சார்ந்த பிரிவு அடைப்படையில் தற்காலிக தகுதிப் பட்டியலை வெளியிடும். இந்த தகுதிப் பட்டியலில் இடம்பிடித்துள்ள தேர்வர்கள் தங்கள் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யவேண்டும்.
2018-2019 மற்றும் 2019-202 ஆண்டுக்கான குரூப் 4 தேர்வில், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பிரிவில் 4499வது இடத்திற்குள் வந்த தேர்வர்கள் சான்றிதழ் பதிவேற்றம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். 4130வது வரை இடத்திற்குள் வந்த மிக பிற்படுத்தப்பட்ட தேர்வர்களும்,6366வது வரை இடத்திற்குள் வந்த பட்டியல் இனத்தைச் சேர்ந்த தேர்வர்களும், 15320 வரைக்குள் வந்த பழங்குடியின தேர்வர்களும் சான்றிதழ் பதிவேற்றம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

சான்றிதழ் சரிபார்ப்புக்குப் பின்னர், தகுதியான விண்ணப்பதாரர்களின் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும். இதனடிப்படையில், தேர்வர்கள் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட உள்ளனர்.
No comments:
Post a Comment