JOIN OUR THAMIZHKADAL TECH SOCIAL MEDIAS





Friday, November 18, 2022

டிசம்பர் 5-ம் தேதி உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு


திருவாரூர் மாவட்டம் முத்துபேட்டையில் ஜாம்புவான் ஓடை தர்கா கந்தூரி விழா ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுவது வழக்கம். தொடர்ந்து 14 நாட்கள் நடைபெறும் கந்தூரி விழாவில் தினமும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும். முக்கிய நிகழ்வான சந்தனக்கூடு நிகழ்வை காண நாடு முழுவதிலிருந்தும் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொள்வார்கள்.

இந்த நிலையில் முத்துப்பேட்டை ஜாம்புவான் ஓடை தர்கா கந்தூரி விழாவை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் டிசம்பர் 5-ம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார். மேலும், டிசம்பர் 5-ம் தேதி விடுமுறை விடப்படுவதால் அதை ஈடு செய்யும் விதமாக டிசம்பர் 10-ம் தேதி பணி நாளாக கருதப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment