JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி
தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் மற்றும் தொழிற்பழகுநர் பயிற்சி வாரியம் இணைந்து மாணவர்களுக்குச் சம்பளத்துடன் தொழிற்பயிற்சி வழங்குகின்றனர்.
இதற்குத் தமிழக மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசின் இந்த வாய்ப்பிற்கு விண்ணப்பிக்க விவரங்களை இங்குத் தெரிந்துகொள்ளுங்கள்.
தொழிற்பயிற்சியின் விவரங்கள்:
போக்குவரத்துக் கழகத்தின் தொழிற்பயிற்சி:
2020,2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் பட்டப்படிப்பு மற்றும் டிப்ளமொ படித்த மாணவர்கள் மட்டும் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம். 1973 தொழிற்பயிற்சி சட்டத்தின் படி இந்த ஆண்டுக்கான மாணவர்கள் தொழிற்பயிற்சியைத் தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.
பிரிவு எண்ணிக்கை மாத உதவித்தொகை பயிற்சி காலம்
மெக்கானிகல் இன்ஜீனியரிங்/ ஆட்டோமொபல் இன்ஜீனியரிங் (பட்டப்படிப்பு) 18 9000 1 வருடம்
மெக்கானிகல் இன்ஜீனியரிங்/ ஆட்டோமொபல் இன்ஜீனியரிங் (டிப்ளமோ) 61 8000 1 வருடம்
கல்வித்தகுதி:
இந்த தொழிற்பயிற்சிக்கு விண்ணப்பிக்க இன்ஜீனியரிங் / தொழில்நுட்பத்தில் முழு நேரப் பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். அதே போல் டிப்ளமோ பிரிவில் விண்ணப்பிக்க இன்ஜீனியரிங் / தொழில்நுட்பத்தில் முழு நேர டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
1973 தொழிற்பயிற்சி சட்டத்தின் படி தொழிற்பயிற்சிக்கு விண்ணப்பிக்க வயது வரம்பு குறைந்தபட்சம் 18 இல் இருந்து 25 வரை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பு:
ஏற்கனவே அரசு சார்ந்த தொழிற்பயிற்சி மேற்கொண்டவர்கள் மறுமுறை மீண்டும் இப்பயிற்சிக்கு விண்ணப்பிக்கக்கூடாது.
தேர்வு செய்யப்படும் முறை:
தொழிற்பயிற்சிக்கு மாணவர்கள் கல்வியில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர் என்று தெரிவித்துள்ளனர். விண்ணப்பதார்களில் தகுதியான மாணவர்களுக்குச் சான்றிதழ் சரிபார்ப்புக்கான அறிவிப்பு விடுக்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள மாணவர்கள் https://www.mhrdnats.gov.in/ என்ற இணையத்தளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். புதிதாக விண்ணப்பிக்கும் மாணவர்கள் என்ரோல் செய்து விண்ணப்பிக்க வேண்டும். ஏற்கனவே என்ரோல் செய்தவர்கள் லாக்கின் செய்து விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய நாட்கள்:
நிகழ்வுகள் தேதிகள்
அன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசி நாள் 30.11.2022.
தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் விவரம் வெளியீடு 05.12.2022.
No comments:
Post a Comment