JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி

உருளைக்கிழங்கு அதிக அளவில் உண்பதால் அதிக ரத்த அழுத்தம் போன்ற நோய்கள் எதுவும் ஏற்படாது என ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இன்றைய நவீன காலத்தில் வேகமாக இயங்கி வரும் வாழ்க்கை முறைக்கு மத்தியில் அனைவரும் துரித உணவுகளை அதிகம் விரும்பி உண்கின்றனர். அதில் கிழங்குகளின் ராஜா என்றழைக்கப்படும் உருளைக்கிழங்கிற்கு மிக முக்கிய இடம் உண்டு.
உருளைக்கிழங்கை பலவிதமான உணவு வகைகளுடன் சேர்த்து சமைக்க முடியும். உருளை கிழங்கை பலவிதமாவும் நம்மால் சமைக்க முடியும். முக்கியமாக தற்போது நடைமுறையில் இருக்கும் உருளை கிழன்கினால் செய்யப்பட்ட நொறுக்கு தீனிகள் பலதும் மக்களால் விரும்பி உண்ணபடுகிற்து. ஆனால் உருளைக்கிழங்கை உண்பதால் உடலில் பல கோளாறுகள் உண்டாகும் என இதற்கு முன்னர் பல்வேறு ஆய்வுகள் தெரிவித்து வந்த நிலையில்.

உருளைக்கிழங்கு உண்பதால் உடலில் நேரடியாக எந்த ஒரு பாதிப்பும் ஏற்படுவதில்லை என அமெரிக்காவில் உள்ள போஸ்டான் பல்கலைக் கழகத்தை சேர்த்த "தி ஜார்ணல் ஆஃப் நியூட்ரிஷனல் சயின்ஸ்" நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. மேலும் ஒரு நாளைக்கு நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட கப் உருளைக்கிழங்குகளை உண்பதால் எந்தவித ஆபத்தும் ஏற்படுவதில்லை. அவற்றை எண்ணெயில் பொறித்தோ அல்லது அவித்தோ கூட நீங்கள் உண்ணலாம் என்று அவர்கள் கூறியுள்ளனர்.
2523 பேரை வைத்து இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில் கலந்து கொண்ட அனைவருமே 30 வயதிற்கு மேற்பட்டவர்கள். இதற்கு முன்னர் உருளைக்கிழங்கு உண்பதால் அதிக ரத்த அழுத்தம் ஏற்படும், டைஸ்லிபிடெமியா என்ற நோய் ஏற்படும் என கருத்து பரவலாக இருந்து வந்தது. ஆனால் இந்த ஆய்வில் பங்கேற்ற அனைவருக்கும் அப்படி எந்த விதமான அறிகுறியும் ஏற்படவில்லை. அதற்கு நேர்மாறாக அவர்களின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டது.
ஆய்வில் பங்கேற்ற அனைவருக்கும் இரண்டாம் நிலை நீரிழிவு நோய் ஏற்படும் வாய்ப்பு 24 சதவீதம் குறைவாகவும், டிரைகிளசரைட்ஸ் எனப்படும் கெடுதல் விளைவிக்கும் கொழுப்பானது 26 சதவீதம் குறைவாகவும் இருந்ததாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
உருளைக்கிழங்கில் இருக்கும் ஆன்ட்டி ஆக்சிடென்ட்ஸ் உடலுக்கு அதிக நன்மையை செய்கின்றனர். இவை உடலில் உள்ள செல்கள் சிதைவடைவதை வெகுவாக குறைத்து, செல்களின் நீண்ட நாள் வாழ்க்கைக்கு உதவுகிறது. இதன் மூலம் உடல் ஆரோக்கியமாக இருப்பதுடன் இளமையான தோற்றமும் நமக்கு கிடைக்கிறது.
இந்த ஆய்வை செப்டம்பர் மாதமே அவர்கள் செய்து முடித்து, அதன் முடிவுகளை கணக்கிட்டு விட்டார்கள். ஆனாலும் இதைப்பற்றி மேலும் அதிக தரவுகளை திரட்டுவதற்காக, 1971 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வின் தரவறிக்கைகளையும் ஒப்பிட்டுப் பார்த்து முடிவுகளை அறிவித்துள்ளார்கள்.
ஆய்வில் பங்கேற்ற பலரும் உருளைக்கிழங்கின் பல்வேறு வகைகளை கொடுத்து ஆய்வு நடத்தப்பட்டது அதில் 36 சதவீதம் பேருக்கு பேக்கிங் செய்த உருளைக்கிழங்கும், 20% பேருக்கு பொரித்த உருளைக்கிழங்கும், 16 சதவீதம் பேருக்கு பிசைந்த உருளைக்கிழங்கும், 9 சதவீத பேருக்கு அவித்த உருளைக்கிழங்கும் கொடுத்து இந்த ஆய்வு நடத்தப்பட்டது.
No comments:
Post a Comment