JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி
பவுர்ணமி நாளில் வானத்தில் வட்ட நிலா பார்த்திருப்பார்கள். முழு சந்திர கிரகணம் ஏற்படபோவதால் ரத்த நிலவாக மாறப்போவதால் இந்த நாளில் என்ன செய்யலாம் என்ன செய்யக்கூடாது என்று தெரிந்து கொள்வோம்.
பொதுவாகவே பவுர்ணமி நாளில் நாம் செய்யும் சில காரியங்கள் நன்மையைத் தரும். சில காரியங்கள் சிக்கலை ஏற்படுத்தும். இந்த சந்திர கிரகண நாளில் மறந்தும் கூட சில தவறுகளை செய்து விடக்கூடாது.
சூரியன், பூமி மற்றும் சந்திரன் ஒரே நேர்கோட்டில் சீரமைக்கும்போது சந்திர கிரகணம் நிகழும். இந்த ஆண்டின் கடைசி மற்றும் இரண்டாவது சந்திர கிரகணம் நவம்பர் 8 ஆம் தேதி நிகழ உள்ளது. மேஷ ராசியில் உள்ள ராகு உடன் சந்திரன் இணையும் போது கிரகணம் நிகழ்கிறது. சந்திர கிரகணம் நிகழும் போது சில ராசிக்காரர்களுக்கு தோஷம் ஏற்பட உள்ளதால் அந்த ராசிக்காரர்கள் அதிக கவனமாக இருக்க வேண்டும்.
இந்தியா மட்டுமின்றி மற்ற ஆசிய நாடுகளும் இந்தக் கிரகணத்தை காண முடியும். இந்தியாவின் கிழக்குப் பகுதிகளில் மட்டுமே முழு சந்திர கிரகணத்தை காண முடியும். நாட்டின் தலைநகர் டெல்லி, கொல்கத்தா, சிலிகுரி, பாட்னா, ராஞ்சி மற்றும் கவுகாத்தி ஆகிய பகுதிகளில் வசிக்கும் மக்கள் முழு சந்திர கிரகணத்தைக் காணலாம். இந்தியாவில் மற்ற பகுதிகளில் வசிப்பவர்கள் பகுதி கிரகணத்தை மட்டுமே காண முடியும்.
முழு சந்திர கிரகணம்

நவம்பர் 8, 2022 செவ்வாய்க்கிழமை அன்று முழு சந்திர கிரகணம் நிகழும். இது 2022 ஆம் ஆண்டின் கடைசி சந்திர கிரகணம் ஆகும். இந்தியாவில், இது பிற்பகல் 2.48 மணிக்குத் தொடங்கி மாலை 06:18 மணிக்கு முடிவடையும். விஞ்ஞானத்தின்படி, சந்திர கிரகணத்தின்போது சந்திரனின் மேல் பூமியின் நிழல் காணப்படுவதால் அது இரத்தம் கலந்த சிவப்பு நிறமாகத் தெரிகிறது.
வெறும் கண்களால் பார்க்கலாம்
சந்திர கிரகணத்தை நேரடியாக வெறும் கண்களால் பார்க்க முடியும். மழை காலமாக இருப்பதால் மேக மூட்டம் எதுவும் இல்லாமல் இருந்தால் நமக்கும் சந்திர கிரகணத்தை நேரடியாக பார்க்கும் அதிர்ஷ்டம் வாய்க்கும் இல்லா விட்டால் நாசா உள்ளிட்ட பல இணைய தளங்களில் நேரடியாக ஒளிபரப்பு செய்வதை பார்க்க முடியும்.
சிவப்பு சிலா
பவுர்ணமி சந்திரன் பொதுவாக பால் வெள்ளை நிறத்தில் வானத்தில் ஒளிரும். இந்த சந்திர கிரகண நாளில் வானத்தில் சந்திரன் செந்நிறத்தில் காட்சியளிக்கும் என கூறப்படுகிறது. முழு சந்திரனும் பூமியின் நிழலின் இருண்ட பகுதிக்குள் விழுவது அம்ப்ரா என்று அழைக்கப்படுகிறது. அம்ப்ராவிற்குள் சந்திரன் இருக்கும்போது, அது சிவப்பு நிறத்தைப் பெற்று ரத்த-சிவப்பு தோற்றத்தை காணும் அரிய வாய்ப்பைத் தருகிறது.
ரத்த நிலவு
ரத்த நிலா என்பது சாதாரணமாக வழக்கத்தில் உள்ள ஒரு சொல். இது அறிவியல் பூர்வமான சொல் அல்ல. கிரகணத்தின்போது நிலா வெண்மையாக இல்லாமல் சிவப்பு நிறத்தில் இருந்து எழுந்து வரும். இதற்குக் காரணம் முழு நிலவு கிரகணத்தின் போது பூமியின் கரு நிழல் வழியாக கடந்து செல்லும். அப்பொழுது சூரிய வெளிச்சம் அனைத்தும் மறைக்கப் பட்டுவிடுகிறது. இதனால் நிலவின் ஒளி பிரதிபலிப்பதில்லை. இருந்தாலும் பூமியிலுள்ள வளி மண்டலம் சூரிய ஒளியை பிரதிபலிக்கிறது. அப்பொழுது நீல ஒளி சிதறடிக்கப் பட்டு விடுவதால் சிவப்பு ஒளி மட்டும் நிலவில் பட்டு சிவப்பாகத் தெரிகிறது.
மறந்தும் செய்யாதீர்கள்
பொதுவாக கிரகண காலம் தோஷ காலமாக கருதப்படுவதால் சில செயல்களை செய்யக்கூடாது என்று சொல்வார்கள். கிரகணம் தொடங்குவதற்கு 9 மணிக்கு முன்பாகவே கோவில்களை மூடி விடுவார்கள். அதே போல சமைத்த உணவும் தோஷமாக கருதப்படுவதால் கிரகண நேரத்தில் யாரும் சமைக்கக் கூடாது என்பதும் நம்பிக்கை.
பணம் கொடுக்கல் வாங்கல்
சந்திரன் மனோ காரகன் எந்த முக்கிய முடிவும் இந்த நாளில் எடுக்கக் கூடாது என்று சொல்வார்கள். பலரும் குழப்பமான மன நிலையில் இருப்பார்கள். எனவே பிசினஸ் தொடர்பான முக்கிய ஒப்பந்தங்களை இந்த நாளில் வைத்துக்கொள்ள வேண்டாம். யாரிடமும் கடன் வாங்குவதோ பணம் கொடுக்கல் வாங்கலோ இந்த நாளில் வைத்துக்கொள்ளக்கூடாது என்றும் கூறுகின்றனர்.
வாகன பயணங்கங்கள்
சந்திர கிரகணம் நிகழும் நேரம் பிற்பகல் நேரமாக இருக்கிறது. அந்த நேரத்தில் பயணத்தை தவிர்க்க முடியாது என்றாலும் வாகனங்களில் வேகமாக செல்வதை தவிர்க்க வேண்டும். நிதானம் அவசியம். கிரகணம் உச்சத்தில் இருக்கும் போது வெளியே சுற்றுவதை தவிர்ப்பது நல்லது. இறை தியானத்தில் ஈடுபடலாம்.
கர்ப்பிணி பெண்கள்

கிரகண நேரத்தில் சமைத்த உணவுகளை சாப்பிடக்கூடாது என்று சொல்வார்கள். கர்ப்பிணிகள், வயதானவர்கள், நோயாளிகளுக்கு விதி விலக்கு என்றாலும் சில மணி நேரங்கள் சாப்பிடாமல் தவிர்த்து விடலாம். கிரகண நேரத்தில் மறந்தும் கூட வெளியே சுற்றக்கூடாது. கருவில் இருக்கும் குழந்தையின் நலன் கருதி வீட்டிற்குள் ஜன்னல் கதவுகளை கூட மூடிக்கொண்டு அமர்ந்திருப்பது நல்லது. கிரகணம் உச்சத்தில் இருக்கும் நேரத்தில் தண்ணீர் குடிப்பதை கூட தவிர்ப்பது நல்லது.
இது ரொம்ப முக்கியம்
கிரகணம் நிகழும் போது உறங்கக் கூடாது என்று சொல்வார்கள். அதே போல தாம்பத்ய உறவிலும் ஈடுபடக்கூடாது என்று முன்னோர்கள் கூறியுள்ளனர். கிரகணம் மாலையில் முடிந்து விடும் அதன் பின்னர் வீடு துடைத்து விட்டு பூஜை அறையில் விளக்கேற்ளி கிரகண கால தோஷங்கள் நீங்க குல தெய்வத்தையும் இஷ்ட தெய்வத்தையும் வழிபடலாம்.
No comments:
Post a Comment