Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Wednesday, December 28, 2022

பெற்றோர்களே கவனம்.! 6 முதல்‌ 18 வயதுடைய குழந்தைகளுக்கு..! வரும் 11-ம் தேதி வரை நடைபெறும் என அறிவிப்பு.!

ஒவ்வொரு ஆண்டும்‌ 6 முதல்‌ 18 வயதுடைய பள்ளிசெல்லா/ இடைநின்ற குழந்தைகள்‌ மற்றும்‌ மாற்றுத்திறன்‌ கொண்ட குழந்தைகளை கண்டறிய சிறப்புக்‌ கணக்கெடுப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது. இதில்‌ கண்டறியப்படும்‌ சூழந்தைகளுக்கு ஒருங்கிணைந்த பள்ளிக்‌ கல்வியின்‌ கீழ்‌ சிறப்புப்‌ பயிற்சி மையங்கள்‌ மூலம்‌ கல்வி வழங்கப்பட்டு வருகிறது.

இது ஒரு தொடர்‌ பணியாகும்‌. கணக்கெடுப்பிற்கான தரவுகள்‌ அனைத்தையும்‌ உள்ளீடு செய்து கணக்கெடுப்பு மேற்கொள்ளும்‌ வகையில்‌ வடிவமைக்கப்பட்டுள்ள கைபேசி செயலி மூலம்‌ 2022 -23 ஆம்‌ ஆண்டிற்கான கணக்கெடுப்பு பணி அனைத்து ஒன்றியங்களிலும்‌ டிசம்பர்‌ 19 முதல்‌ ஜனவரி 11 வரை எந்தவொரு குடியிருப்பும்‌ விடுபடாமல்‌ வீடு வாரியாக கணக்கெடுப்பு பணிநடைபெற்று வருகிறது.

ஒன்றிய அளவில்‌ கணக்கெடுப்பில்‌ ஈடுபடும்‌ களப்பணியாளர்களாக பள்ளி தலைமை ஆசிரியர்கள்‌/ஆசிரியர்கள்‌, ஆசிரியர்‌ பயிற்றுநர்கள்‌, சிறப்பு பயிற்றுநர்கள்‌ இயன்‌ முறை பயிற்சியாளர்கள்‌, பள்ளி மேலாண்மைக்‌ குழு, கல்வி தன்னார்வலர்கள்‌, சுயஉதவிக்‌ குழுக்கள்‌ மற்றும்‌ தன்னார்வல தொண்டு நிறுவன பணியாளர்கள்‌ இப்பணியில்‌ ஈடுபட்டு வருகின்றனர்‌.

6 முதல்‌ 18 வயதுடைய பள்ளி செல்லா/இடைநின்ற குழந்தைகள்‌ மற்றும்‌ 6 முதல்‌ 18 வயது வரையுள்ள மாற்றுத்திறன்‌ கொண்ட குழந்தைகளை கண்டறியும்‌ கணக்கெடுப்பு பணி குடியிருப்பு வாரியாக மேற்கொள்ள சார்புடைய அனைத்து துறையினரின்‌ ஒத்துழைப்பையும்‌ வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment