Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Monday, December 12, 2022

இளநிலை மறுவாழ்வு அலுவலர் பதவிக்கான தேர்வு இணையம் வழியாக ஜன.7 வரை விண்ணப்பிக்கலாம்: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

இளநிலை மறுவாழ்வு அலுவலர் பதவிக்கான தேர்வுக்கு இணையதளம் வாயிலாக ஜனவரி 7ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) தமிழ்நாடு பொது சார்நிலை பணியில் அடங்கிய இளநிலை மறுவாழ்வு அலுவலர் (மாற்று திறனாளிகளுக்கான மாநில ஆணையரகம்) பதவியில் காலியாக உள்ள 7 பதவிகளை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இப்பதவிகளுக்கு இணையதளம் www.tnpsc.gov.in, www.tnpscexams.in வாயிலாக ஜனவரி 7ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இணையவழி விண்ணப்பத்தை திருத்தம் செய்ய ஜனவரி 12ம் தேதி நள்ளிரவு 12.01 மணி முதல் 14ம் தேதி இரவு 11.59 மணி வரை காலம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இப்பதவிகளுக்கான கணினி வழி தேர்வு ஏப்ரல் 1ம் தேதி நடைபெறுகிறது. ஏப்ரல் 1ம் தேதி காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை முதல் தாள் தேர்வும்(முதுகலைப்பட்டப்படிப்பு தரம்), பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை 2ம் தாள் தேர்வும் நடக்கிறது.

அதாவது பகுதி ‘அ’ வில் கட்டாய தமிழ் மொழி தகுதி தேர்வு (10ம் வகுப்பு தரம்), பகுதி ‘ஆ’ பொது அறிவு (பட்டப்படிப்பு தரம்) தேர்வும் நடக்கிறது. கணினி வழி தேர்வு சென்னை, மதுரை, கோவை, திருநெல்வேலியில் நடைபெற உள்ளது. இத்தேர்வுக்கான கல்வி தகுதி, படிப்பு உள்ளிட்ட விவரங்கள் அனைத்தும் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

புயலால் டிஎன்பிஎஸ்சி தேர்வு ஒத்திவைப்பு

மாண்டஸ் புயலால் நேற்று நடக்கவிருந்த டிஎன்பிஎஸ்சி தேர்வு ஒத்திவைக்கப்பட்டது.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) செயலாளர் மற்றும் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் உமா மகேஸ்வரி வெளியிட்ட அறிவிப்பு:

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் தமிழ்நாடு வன சார்நிலை பணியில் அடங்கிய வனத்தொழில் பழகுநர்(குரூப் 6) பதவி நியமனத்திற்காக 10ம் தேதி(நேற்று) நடைபெற இருந்த தேர்வு மட்டும் மாண்டஸ் புயல் காரணமாக தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்படுகிறது. இத்தேர்வுகள் நடைபெறும் நாள் பின்னர் அறிவிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment