Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, December 1, 2022

கிராம உதவியாளர் தேர்வு: அட்மிட் கார்டை பதிவிறக்கம் செய்வது எப்படி?


தமிழகத்தின் அனைத்து மாவட்ட வருவாய் அலகில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பதவிக்கான எழுத்துத் தேர்வு வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 10 மணி முதல் 11 மணி வரை நடைபெறுகிறது.

1 மணி நேரம் நடக்கும் இந்த எழுத்துத் தேர்வில் 100 வார்தைகளுக்கு மிகாமல் ஏதேனும் ஒரு தலைப்பில் எழுத வேண்டும்.

அனுமதிச் சீட்டு: அனுமதிச் சீட்டினை பதிவிறக்கம் செய்வதற்கான விவரங்கள், விண்ணப்பதாரர்கள் விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ள தொலைபேசி எண்ணிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. https://agaram.tn.gov.in என்ற இணைப்பின் மூலமாக அனுமதிச் சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

தேர்வு நிபந்தனைகள்:

தேர்வுக்கான அனுமதிச் சீட்டினை தேர்வு அறைக்கு தவறாமல் கொண்டு வர வேண்டும். இந்த தேர்வுக்கு உரிய அனுமதிச் சீட்டு இல்லாமல் எந்த விண்ணப்பதாரரும் தேர்வெழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

விண்ணப்பதாரர்கள் அனைவரும் காலை 9.30 மணிக்கு தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்படுவர். காலை 9.50 மணிக்குப் பின் அனுமதிக்கப்பட்ட மாட்டார்கள்.

விண்ணப்பதாரர் கருப்பு பால் பாயிண்ட் பேனாவை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

அனுமதிச் சீட்டு மற்றும் கருப்பு பால் பாயிண்ட் பேனாவைத் தவிர வேறு எதையும் தேர்வு அறைக்குள் கொண்டு வரக்கூடாது.

விண்ணப்பதாரர்கள் அலைபேசி, புத்தகங்கள், கைப்பைகள் மற்றும் வேறு எந்தவொரு மின்னணு சாதனங்களையும் தேர்வு மையத்திற்கு கொண்டு வரக்கூடாது.

No comments:

Post a Comment