JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி

நாகையில் உள்ள தனியார் பள்ளியில் பாடம் நடத்தி கொண்டிருந்தபோது புரொஜெக்டரில் ஆபாச படம் வெளியானது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். நாகையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் நேற்று முன்தினம் 6ம் வகுப்பு மாணவர்களுக்கு புரொஜக்டர் மூலம் அறிவியல், கணினி பாடம் நடத்தப்பட்டது. அப்போது அதில் ஆபாச காட்சிகள் கொண்ட சில பதிவுகள் ஓடியதாக கூறப்படுகிறது. இதை பார்த்த மாணவ, மாணவிகள் அதிர்ச்சியடைந்து ஆசிரியர்களிடம் தெரிவித்தனர்.
இதையடுத்து புரொஜெக்டர் நிறுத்தப்பட்டது. இந்த சம்பவம் குறித்து தனது பெற்றோரிடம் ஒரு மாணவி கூறினார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர், கலெக்டர் அருண் தம்புராஜிடம் புகார் செய்தனர். அதன்பேரில் பள்ளிக்கு நேற்று சென்று மாணவ, மாணவிகளிடம் மாவட்ட கல்வி அலுவலர்கள், குழந்தைகள் நல அலுவலர்கள் விசாரணை நடத்தினர்.
No comments:
Post a Comment