JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் அட்டைத்தாரர்களுக்கு ஆண்டுதோறும் வேட்டி, சேலை, பணம் உள்ளிட்ட பரிசுப் பொருட்கள் வழங்கப்படும்.
அதனுடன் பொங்கல் வைக்க தேவைப்படும் தேவையான அரசி, முந்திரி, திராட்சை உள்ளிட்ட பொருட்களுடன் கரும்பு வழங்கப்பட்டு வருகிறது. 2022 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திமுக தலைமையிலான அரசு ரேஷன் அட்டைதாரர்களுக்கு 21 வகை பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பு மற்றும் 1000 ரூபாய் ரொக்கம் வழங்கியது.
அதேப்போன்று வரஉள்ள 2023 பொங்கல் பண்டிகைக்கு அரசு வழங்க உள்ள பொங்கல் தொகுப்பு குறித்து மக்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். அதனுடன் கடந்த ஆண்டு போன்றே ஆயிரம் ரூபாய் ரொக்கமும் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் திமுக அரசின் முக்கியமான தேர்தல் வாக்குறுதியான குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 எப்போது அறிவிக்கப்படும் என்று பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர். கடந்த தமிழக பட்ஜெட்டின் போது நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 வழங்கும் திட்டத்திற்கான தகுதி வாய்ந்த ரேஷன் கார்டுகள் கணக்கிடும் பணி தொடங்கி உள்ளதாக தெரிவித்தார். அந்த பணிகள் விரைவில் முடிவடைந்து இந்த திட்டம் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட உள்ளது.
தற்போது உதயநிதி ஸ்டாலின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். மேலும் சிறப்பு திட்ட செயலாக்கம், வறுமை ஒழிப்பு திட்டங்கள் மற்றும் ஊரகக் கடன்கள் ஆகிய துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக பொங்கல் தொகுப்பு உடன் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டமும் செயல்பாட்டிற்கு வரும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
பொங்கல் பரிசு தொகை ஆயிரம் ரூபாய் மாதம், ஆயிரம் ரூபாய் உதவித்தொகை என இரட்டிப்பு பரிசு பொங்கலுக்கு காத்திருக்கிறது என்ற தகவலால் பலர் மகிழ்ச்சியில் உள்ளனர். ஆனால் இது தொடர்பா அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியாகாத நிலையில் விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment