JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி

நம்முடைய முன்னோர்கள் காலத்தில் பெரும்பாலனோருக்கு மூட்டு வலி, முதுகு வலி, எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனை போன்றவைகள் ஏற்படாது.
ஆனால் தற்போது பெரியவர்கள் முதல் பெரியவர்கள் வரை எலும்பு சம்பந்தமான பிரச்சனைகள் இருக்கின்றது.அதனை சரி செய்வதற்கு ஏராளமான வழிமுறைகளை பின்பற்றினாலும் முறையான மருத்துவம் இல்லாததால் அவை இன்னும் அதிகரித்துத்தான் வருகிறதே தவிர குறையவில்லை.
இரண்டு பொருளை வைத்து எவ்வாறு முழங்கால் வலி, கை வலி, கழுத்து வலி போன்ற இரும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை சரி செய்வது என்று இந்த பதிவில் மூலம் காணலாம்.
நாம் வீட்டிலேயே அதற்கான மருத்துவங்களை வைத்துக் கொண்டு நாம் மருத்துவர்களை தேடி செல்கின்றோம். ஒரே இடத்தில் அமர்ந்து வேலை பார்ப்பதனால் பலவிதமான பிரச்சனைகள் சந்தித்து வருகின்றோம். அதனை சரி செய்வதில் கற்பூரவள்ளி முதன்மையான ஒன்றாக உள்ளது.
முதலில் இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும் அந்த தண்ணீரில் 3 அல்லது 2கற்பூரவள்ளி இலையை சேர்க்க வேண்டும். இரண்டு நிமிடங்கள் கொதித்த பிறகு. இஞ்சி அல்லது சுக்கு சேர்த்துக் கொள்ள வேண்டும். நாம் ஊற்றிய இரண்டு டம்ளர் தண்ணீர் ஒரு டம்ளர் தண்ணீராக வரும் வரை கொதிக்க வைக்க வேண்டும்.
அதன் பிறகு அதனை வடிகட்டி அதனுடன் தேன், நாட்டு சர்க்கரை, வெல்லம் என ஏதேனும் ஒன்றை கலந்து வெது வெதுப்பாக குடிக்க வேண்டும். இவ்வாறு செய்தால் நமக்கு ஏற்பட்டுள்ள வலிகள் அனைத்தும் மறைந்துவிடும். குறிப்பாக இரவு தூங்க செல்வதற்கு முன்பு இதனை குடிப்பது சிறந்தது. இவ்வாறு குடிக்கும் பொழுது நம் உடம்பில் உள்ள பூச்சிகள் அனைத்தும் அழிந்துவிடும்.
No comments:
Post a Comment