Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Sunday, December 4, 2022

இந்த நோய்கள் அனைத்தும் குணமாக வேண்டுமா? தினமும் சுரக்காய் எடுத்துக் கொள்ளுங்கள்!


நீர் சத்து குறைவதால் பெரும்பாலானோருக்கு உடல் நலக்குறைவு ஏற்படுகிறது.

அவ்வாறான பிரச்சனைகளை சரி செய்வதில் சுரைக்காய் முக்கிய பங்கு வகிக்கிறது. சுரைக்காய் உண்பதன் மூலம் என்ன பலன் என்று இந்த பதிவின் மூலம் காணலாம்.

சுரைக்காய் பொதுவாக நீர் தன்மை கொண்டது.சுரைக்காயை ஏதாவது ஒரு வகையில் உணவில் சேர்த்து வந்தால் உடல் சூடு குறையும், வெப்ப நோய்கள் ஏதுவும் வாராது.

மேலும் சிறுநீர் நன்கு வெளியேற சுரைக்காய் சிறந்த மருந்தாக உள்ளது.சுரைக்காயை மதிய உணவுடன் சேர்த்து வந்தால் பித்தம் சமநிலையாக இருக்கும்.

மேலும் சுரைக்காய் நரம்புகளுக்கு புத்துணர்வைக் கொடுத்து, உடலை வலுப்படுத்தும்.பெண்களுக்கு உண்டாகும் சோகையைப் போக்கும் மற்றும் இரத்தத்தைச் சுத்தம் செய்வதிலும் முதன்மையாக உள்ளது.

மேலும் குடல் புண்ணை குணப்படுத்த உதவுகிறது.மூலநோய் உள்ளவர்களுக்கு சுரைக்காய் எடுத்துக் கொண்டால் சிறந்தது.

சுரைக்காயின் சதையை வெட்டி உடலில் தேய்த்து சிறிது நேரம் கழித்து குளித்து வந்தால் உடல் எரிச்சல் குறையும். சுரைக்காயைச் சுட்டு சாம்பலாக்கி தேனில் குழைத்து சாப்பிட்டு வந்தால் கண்நோய் குணமாகும்.

சுரையின் இலைகளை நீரிலிட்டு ஊறவைத்து அந்த நீரைப் பருகி வந்தால் வீக்கம், பெருவயிறு, நீர்க்கட்டு நீங்கும். காமாலை நோய்க்கும் சுரைக்காய் சிறந்த மருந்தாக அமைந்துள்ளது.

No comments:

Post a Comment