Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Sunday, December 4, 2022

மின் இணைப்புடன் ஆதாரை இணைப்பதில் புதிய வசதி.. 2 நிமிடம் கூட ஆகாது.. இதோ அதற்கான ஈஸியான ஸ்டெப்ஸ்


மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க ஒரே நேரத்தில் பலர் முயன்றதால் சர்வர் பிரச்னை, ஆன்லைனில் ஆதார் நகலை அப்லோடு செய்வதில் சிக்கல் போன்றவற்றால் நுகர்வோர்கள் பெரும் சிக்கலை சந்தித்து வந்தனர். இதனால் பொது மக்களின் சிரமங்கள் விரைவில் சரிசெய்யப்படும் என்று மின்வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி தற்போது மின்இணைப்புடன் ஆதாரை இணைக்கும் பணியை மின்வாரியம் எளிமைப்படுத்தி உள்ளது. அதன்படி ஆதார் எண்ணை மட்டும் பதிவிட்டால் போதும். நகலை பதிவேற்றம் தேவை செய்யவில்லை. இதனால் பயனாளர்கள் 2 நிமிடத்தில் ஆதாரை மின்இணைப்புடன் இணைக்க முடியும்.

இணையம் மூலம் எவ்வாறு ஆதார் எண்ணை இணைப்பது?

Step 1 : ஆதாரை இணைக்கhttps://nsc.tnebltd.gov.in/adharupload/ என்ற இணையதள பக்கத்திற்கு சென்று உங்கள் மின் இணைப்பு எண், மொபைல் எண், இமேஜில் இருக்கும் டெக்ஸ்டை டைப் செய்ய வேண்டும்.

Step 2 : நீங்கள் டைப் செய்த மின்இணைப்புக்கான நுகர்வோர் பெயர் திரையில் தெரியும். அதற்கு கீழ் நீங்கள் அந்த வீட்டிற்கு உரிமையாளரா அல்லது வாடகைக்கு குடியிருப்போரா அல்லது நீங்கள் அந்த வீட்டின் உரிமையாளர் ஆனால் மின் இணைப்பு வேறு ஒருவர் பெயரில் உள்ளதா என்ற ஆப்ஷன்களை தோன்றும். அதன்பின் உங்கள் ஆதார் எண்ணை டைப் செய்து நெக்ஸ்ட் கொடுக்க வேண்டும்

Step 3 : ஆதார் எண் உடன் நீங்கள் இணைத்துள்ள கைப்பேசி எண்ணுக்கு OTP வரும். அதனை நீங்கள் டைப் செய்து சப்மிட் கொடுத்தால் போதும். உங்கள் ஆதார் மின்இணைப்புடன் இணைக்கப்பட்டு விடும். மிக எளிதாக ஆதாரை இணைத்து விடலாம்.

No comments:

Post a Comment