JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி

நம்மில் பலரும் காலை உணவாக பூரி எடுத்துக் கொள்வது வழக்கம்தான். அந்த வகையில் ஒரு சிலர் பூரி மேல் உள்ள பிரியத்தால் தினம்தோறும் அதனையே காலை உணவாக சாப்பிடுவர். குறிப்பாக பூரி சட்டென்றுன்று செய்யக்கூடிய ஒரு உணவு பொருள் ஆகும். அவ்வாறு காலை நேரத்திலேயே அதிக அளவு என்னைக் கொண்ட உணவு பொருட்களை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகின்றார்கள்.
ஏனென்றால் காலை நேரத்தில் அதிக அளவு நெய் என்னை போன்ற உணவுப் பொருட்களை நாம் உண்பதால் உடல்நிலை மிகவும் மந்தமாக காணப்படுவதுடன் செரிமான கோளாறு பிரச்சனை உண்டாகும். குறிப்பாக குழந்தைகளுக்கு இதை நாம் கொடுப்பதால் அவர்களாலும் அந்நாள் முழுவதும் சுறுசுறுப்புடன் காண முடியாத சூழல்தான் உண்டாகும்.
அதனால் மருத்துவர்கள் காலை நேரத்தில் எப்பொழுதும் விரைவிலேயே செரிக்கும் உணவான இட்லி போன்றவற்றை சாப்பிட வேண்டும் என்று அறிவுரை கூறியுள்ளனர். மேற்கொண்டு பூரி சாப்பிடுபவர்கள் அதற்கு முன்பாக ஒரு டம்ளர் இளம் சூடுள்ள நீரை குடித்துவிட்டு சாப்பிடுமாறு தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment