JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி

அரசு தொழில்நுட்ப தேர்வுகளுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசின் தொழில்நுட்ப கல்வித்துறை தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
இது குறித்து தொழில்நுட்ப கல்வித்துறை தேர்வு வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: அரசு தொழில்நுட்பக் கல்வித் துறையால் நடத்தப்படும் தட்டச்சு, சுருக்கெழுத்து மற்றும் கணக்கியல் தேர்வுகள் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற உள்ளன. இத்தேர்வுகளில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் நாளை (டிச.27) முதல் www.tndtegteonline.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
இது தொடர்பான முழு விவரங்களை www.dte.tn.gov.in என்ற தொழில்நுட்பக் கல்வித் துறையின் இணையளத்தில் தெரிந்து கொள்ளலாம். கூடுதல் விவரங்களுக்கு 044-22351018, 22351014, 22351015 என்ற தொலைபேசி எண்களையும் தொடர்பு கொண்டு பயனடையலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment