JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி

30 வயதை கடந்து விட்டாலே எலும்பு தேய்மானம் என ஆரம்பித்து பெரும்பாலான பெண்களுக்கு தான் முதலில் மூட்டு வலி ஏற்படுகிறது.
மருத்துவரின் நாடினாலும் அவர்கள் கால்சியம் மற்றும் ஐயன் மாத்திரை கொடுத்து தொடர்ந்து சாப்பிட்டு வர கூறி விடுகிறார்கள்.
மேலும் பலருக்கும் எலும்பில் உள்ள ஜவ்வு இல்லாத விட்டால் அவர்களுக்கு அறுவை சிகிச்சை செய்யும் அளவிற்கு வந்துவிடுகிறது. அவ்வாறு மூட்டு வலி இருப்பவர்கள் உங்கள் வீட்டின் அருகில் இருக்கும் இந்த ஒரு இலையை வைத்து சரி செய்து கொள்ளலாம்.
நமது வீட்டின் அருகில் இருக்கும் எருக்கம் செடியில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் உள்ளது. இந்த பதிவில் வருவதைப் போல் அதனை பயன்படுத்தினால் மணிக்கட்டு மூட்டு வலி உடனடியாக குணமாகும்.
முதலில் சிறிதளவு கற்றாழை ஜெல் சிறிதளவு மஞ்சள் மற்றும் ஒரு ஸ்பூன் கடுகு எண்ணெய் ஆகியவற்றை நன்றாக கலந்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு எடுத்து வைத்துள்ள எருக்கம் செடியின் இருபுறமும் கடுகு எண்ணெயை தடவி தோசை கல்லை அடுப்பில் வைத்து சிறிது நேரம் வதக்கி எடுக்க வேண்டும்.
பின்பு வலியுள்ள மூட்டுகளில் நாம் முதலில் கலந்து வைத்துள்ள பேஸ்ட்டை தடவிக்கொள்ள வேண்டும்.
பின்பு வதக்கி வைத்துள்ள எருக்கம் செடியின் இலையையும் அதன் மேல் வைக்க வேண்டும். ஒரு வெள்ளை துணி கொண்டு அதனை கட்டிக் கொள்ள வேண்டும்.
இரவு நேரம் தூங்குவதற்கு முன்பு கூட இதனை செய்து கொண்டு தூங்கலாம். காலையில் அந்த கட்டை அவிழ்த்து விடலாம். இவ்வாறு செய்து வர மூட்டு மற்றும் மணிக்கட்டு வலி முற்றிலும் குணமாகும்.
No comments:
Post a Comment