Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Tuesday, January 24, 2023

டிஎன்பிஎஸ்சி வேலைவாய்ப்பு : தமிழ்நாடு ஊராட்சித் துறையில் 761 சாலை ஆய்வாளர் காலியிடங்கள்

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் உள்ள 761 சாலை ஆய்வாளர் பணியிடங்களுக்கான ஆள்சேர்க்கை அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.


பதவியின் பெயர் சாலை ஆய்வாளர்
காலியிடங்கள் 760
ஊதியயம் ரூ.19,500 - 71500

வயது

பொதுப் பிரிவினர், 1.07.2023 அன்று 37 வயதிற்கு மிகாதவராக இருத்தல் வேண்டும்.

ஏனைய பிரிவினருக்கு உச்ச வயது வரம்பு கிடையாது

கல்வித் தகுதி

ஐ.டி.ஐ (கட்டுமான வரைதொழில் அலுவலர்) சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்;

சிவில் படிப்பில் பட்டயம் பெற்ற விண்ணப்பத்தாரக்ளுக்கு முன்னுரிமை

Must possess an I.T.I. Certificate in Civil Draughtsmenship from a Government recognized institute:

Provided that preference shall be given to the persons possessing a Diploma in Civil Engineering.
தேர்வு முறை

எழுத்துத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் இறுதி பட்டியல் தயாரிக்கப்படும்

எழுத்துத் தேர்வு

தாள் 1: பாடத்தாள் (தொழிற்பிரிவு தரம்)

தாள் 2: பகுதி அ: கட்டாய தமிழ் மொழி தகுதித் தேர்வு

பகுதி ஆ : பொது அறிவு

விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பதற்குரிய கடைசி நாள் 11.02.2023

விண்ணப்பக் கட்டணம்: இதற்கான விண்ணப்பக் கட்டணம் ரூ.100 ஆகும். டிஎன்பிஎஸ்சி ஒருமுறை பதிவுக் கட்டணம் ரூ.150 ஆகும். ஆதிதிராவிடர், அருந்ததியர், பழங்குடியினர், ஆதரவற்ற விதவைகள், நிர்ணயிக்கப்பட்ட குறைபாடுள்ள மாற்றுத் திறனாளிகள் தேர்வுக் கட்டணம் செலுத்த தேவையில்லை.

விண்ணப்பம் செய்வது எப்படி? தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.tnpsc.gov.in -யில் விண்ணப்பிக்க வேண்டும். முழுமையாக பூர்த்தி செய்யப்படாத, தகுதியில்லாத, காலம் கடந்து பெறப்பட்ட விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment