Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Friday, January 6, 2023

ADW பள்ளிகளில் காலியாக உள்ள PG,BT,SGT ஆசிரியர் பணியிடங்களை தொகுப்பூதியத்தில் நிரப்ப உத்தரவு.

ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் மேல்நிலை / உயர்நிலை / நடுநிலை / தொடக்கப்பள்ளிகளில் கல்வி பயிலும் மாணாக்கர்களின் நலன் கருதி முதுகலைப்பட்டதாரி ஆசிரியர் / பட்டதாரி ஆசிரியர் / இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்பிட ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் பட்டியல் கோரப்பட்டு ஆசிரியர் தேர்வு வாரியமும் அதற்கான நடவடிக்கை மேற்கொண்டு வரும் நிலையில் . பதவி உயர்வு வழங்குவதற்கான நடவடிக்கையும் நிறைவுற்று காலிப்பணியிடங்கள் நிரப்ப சிறிது காலம் ஆகக்கூடும் என கருதப்படுவதால் , மாணாக்கர்களின் கற்றல் கற்பித்தல் மற்றும் பொதுத்தேர்வு எழுதும் வகுப்புகளில் பயிலும் மாணாக்கர்களின் நலன் கருதி அவர்களை பொதுத்தேர்வு எழுதுவதற்கு தயார் செய்வதற்கு ஏதுவாகவும் , காலிப்பணியிடங்களை பதவி உயர்வு மற்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் பணிநாடுநர்களை தேர்வு செய்து நிரந்திர பணியாளர்கள் நிரப்பிடும் வரை மாற்று ஏற்பாடாக செய்ய வேண்டியுள்ள நிலையில் , பார்வையில் காணும் அரசாணையில் தற்காலிகமாக காலிபணிடங்களை தொகுப்பூதியத்தில் நியமனம் செய்திட ஆணை வரப்பெற்றுள்ளது.

மேற்படி அரசாணையில் , பள்ளி மேலாண்மைக் குழு மூலம் தொகுப்பூதிய அடிப்படையில் , தமிழ்நாடு அரசுப்பணியாளர்கள் ( பணி நிபந்தனைகள் சட்டம் 2016 பிரிவு 19 - இன்படி முற்றிலும் தற்காலிகமாக நிரப்பிட அரசு அனுமதி அளித்து ஆணையிடப்பட்டுள்ளதை தொடர்ந்து , ஆதிதிராவிடர் நலப்பள்ளியில் காலியாக உள்ள 19 முதுகலைப்பட்டதாரி ஆசிரியர்கள், 80 பட்டதாரி ஆசிரியர்கள் , 366 இடைநிலை ஆசிரியர்களை ( இணைப்பில் தெரிவித்துள்ள காலிப்பணியிடங்களுக்கு மட்டும் ) பள்ளி மேலாண்மைக் குழு மூலம் தற்காலிகமாக ஆசிரியர் பணிக்கு தகுதி பெற்ற நபர்களைக் கொண்டு இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ 7500 / - , பட்டதாரி ஆசிரியர்களுக்கு ரூ .10,000 / - மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு ரூ .12,000 / - மாதத் தொகுப்பூதியத்தில் கீழ்கண்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நிரப்பிட சம்மந்தப்பட்ட மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலருக்கு அனுமதி அளித்து ஆணையிடப்படுகிறது.

பணி நியமனத்திற்கான வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் காலிப்பணியிட பள்ளிகள் விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment