JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி

பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும்.
முடக்கப்பட்ட அகவிலைப்படி மற்றும் சரண்டர் உடனே வழங்க வேண்டும்.
இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் முதல்நிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும்.
தொகுப்பூதியத்தில் சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணிபுரியும் சத்துணவு அங்கன்வாடி ஊழியர் எம்ஆர்பி செவிலியர் வருவாய் கிராம உதவியாளர் ஊர்புற நூலகர் உள்ளிட்டோருக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.
காலி பணியிடங்களை பூர்த்தி செய்ய வேண்டும்.
உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் வியாழக்கிழமை 05.01. 2023 அன்று மாலை திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
அதற்கான ஆலோசனை கூட்டம் இன்று 03.01.2023 சிந்து பூந்துறை கல்லூரி பேராசிரியர் சங்க அலுவலக கட்டடத்தில் ( MUTA ) வைத்து நடைபெற்றது.
ஆலோசனைக்கூட்டத்தில் ஜாக்டோ ஜியோ மாநில உயர்மட்டக்குழு உறுப்பினரும், தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாநிலச்செயலாளருமான நல்லாசிரியர் இராஜேந்திரன் அவர்களும், ஆசிரியர் மன்றத்தின் திருநெல் வேலி மாவட்ட பொறுப்பாளர் இராஜகுமார் அவர்களும் உரையாற்றிய நிகழ்வு.
No comments:
Post a Comment