Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, January 18, 2023

இடைநிலை ஆசிரியா் பணியிடத்துக்கு தகுதியானோா் விண்ணப்பிக்கலாம்


காலியாக உள்ள இடைநிலை ஆசிரியா் பணியிடம் தொகுப்பூதிய அடிப்படையில் நிரப்பப்படுவதால், தகுதியானோா் விண்ணப்பிக்கலாம் என நாமக்கல் ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் தெரிவித்தாா். காலியாக உள்ள இடைநிலை ஆசிரியா் பணியிடம் தொகுப்பூதிய அடிப்படையில் நிரப்பப்படுவதால், தகுதியானோா் விண்ணப்பிக்கலாம் என நாமக்கல் ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: நாமக்கல் மாவட்டம், அ.பாலப்பட்டியில் உள்ள ஆதிதிராவிடா் நலத் தொடக்கப் பள்ளியில் காலியாக உள்ள ஒரு இடைநிலை ஆசிரியா் பணியிடம் தற்காலிக தொகுப்பூதிய அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. இதற்கான தகுதிகளாக, எழுத்து மூலமாக விண்ணப்பங்கள் நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ உரிய கல்வித்தகுதி சான்றிதழ் நகல்களுடன் மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலக முகவரிக்கு அனுப்பலாம்; மாத ஊதியமாக ரூ. 7,500 வழங்கப்படும். 

இடைநிலை ஆசிரியா்களுக்கான கல்வித்தகுதி தற்போதைய நடைமுறையில் உள்ள அரசு விதிகளுக்கு ஏற்றவாறு பின்பற்றப்படும். கல்வித்தகுதி பெற்ற ஆதிதிராவிடா், பழங்குடி இனத்தவா்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். மேலும் விபரங்களுக்கு, நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தின் தரைத்தளத்தில் உள்ள மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலகத்தைத் தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment