Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Monday, January 16, 2023

JEE தரவரிசையில் முதல் 20% இடங்களைப் பெறும் மாணவர்களுக்கு பிளஸ்-2 மதிப்பெண்களில் தளர்வு

மத்திய கல்வி அமைச்சக அதிகாரிகள் தகவல்

ஒருங்கிணைந்த (ஜேஇஇ-அட்வான்ஸ்டு) நுழைவுத் தேர்வின் முதன்மைத் தேர்வில் முதல் 20 சதவீத இடங்களில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் ஐஐடி மற்றும் என்ஐடி உள்ளிட்ட மத்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெற 12-ஆம் வகுப் பில் 75 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டிய தேவையில்லை' என்று மத்திய கல்வி அமைச்சக அதிகாரிகள் புதன்கி ழமை தெரிவித்தனர்.




மத்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் பி.டெக். உள்ளிட்ட இளநிலை பொறியியல்-தொழில்நுட்பப் படிப்புகளில் சேர்க்கை பெறுவதற்கு தகுதி பெறுவதற்கான ஜேஇஇ தேர்வு இருகட்டங்களாக (முதல்நிலை (மெயின்) மற்றும் முதன்மை (அட்வான்ஸ்டு) நடத்தப்ப டும்.

தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) சார்பில் நடத்தப்படும் முதல்நி லைத்தேர்வில் தகுதி பெறுபவர்கள் என்ஐஐடி, என்ஐடி போன்ற கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெற முடியும். மேலும், முதல்நிலைத் தேர் வில் முதல் 2.5 லட்சம் இடங்களைப் பிடிப்பவர்கள் ஜேஇஇ முதன் மைத் தேர்வை எழுதும் தகுதியைப் பெறுவர். 

இதில் தகுதி பெறுபவர் கள் நாடு முழுவதும் உள்ள ஐஐடி கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெற முடியும். இந்த நுழைவுத் தேர்வில் தகுதி பெறும் மாணவர்கள், 12-ஆம் வகுப்பில் 75 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருப் பதும் அவசியமாகும்.

இந்த நிலையில், மாநில கல்வி வாரியங்களில் படித்து ஜேஇஇ முதன் மைத் தேர்வில் தகுதி பெறும் மாணவர்கள், 12-ஆம் வகுப்பில் 75 சத வீத மதிப்பெண்கள் (350/500 மதிப்பெண்) பெறாத காரணத்தால் ஐஐ டிக்களில் சேர முடியாமல் போகிறது. 

எனவே, 12-ஆம் வகுப்பு மதிப் பெண் நிபந்தனையை தளர்த்த வேண்டும் என்ற கோரிக்கை மத்திய கல்வி அமைச்சகத்திடம் முன்வைக்கப்பட்டது. அதனை ஏற்று, மத்திய அமைச்சகம் மதிப்பெண் தளர்வு அளித்திருப்பது தெரியவந்துள்ளது.

No comments:

Post a Comment