Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Wednesday, March 15, 2023

முதுநிலை மருத்துவ படிப்பு நீட் தேர்வு முடிவு வெளியீடு

முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான 'நீட்' தேர்வு முடிவுகள், நேற்று வெளியிடப்பட்டுள்ளன.

மருத்துவப் பட்ட மேற் படிப்புகளான எம்.டி., - எம்.எஸ்., மற்றும் டிப்ளமா படிப்புகளுக்கு, தமிழகத்தில் 4,000 இடங்கள் உட்பட 42 ஆயிரத்து 500 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன. இந்த இடங்கள், தேசிய தகுதி மற் றும் நுழைவுத் தேர்வான 'நீட்' மதிப்பெண் அடிப்படை யில் நிரப்பப்படுகின்றன.

வரும், 2023 - 24ம் கல்வி யாண்டு மாணவர் சேர்க்கைக்கான 'நீட்' தேர்வு, 5ம் தேதி நடந்தது. இதில், தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., முடித்த 25 ஆயிரம் பேர் உட்பட, 2.09 லட்சம் பேர் பங்கேற்றனர்.

இந்நிலையில், நீட் தேர்வு முடிவுகளை, www.natboard.edu.in, nbe.edu.in ஆகிய இணையதளங்களில், தேசிய தேர்வுகள் வாரியம் நேற்று வெளியிட்டது.

மொத்தம் 800 மதிபெண்களுக்கு நடந்த தேர்வில், 'கட் - ஆப்' மதிப்பெண்ணாக பொதுப் பிரிவினர் மற்றும் பொருளாதாரத்தில் நலிவடைந்த பொதுப் பிரிவினருக்கு 291; பொதுப் பிரிவினரில் மாற்றுத் திறனாளிகளுக்கு 274; இதர பிற்படுத்தப்பட்டோரான ஓ.பி.சி., - எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினர்களுக்கு 257 மதிப்பெண் என, நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவுகளை, வரும் 31ம் தேதி வெளியிடுவதாக, தேசிய தேர்வுகள் வாரியம் அறிவித்திருந்த நிலையில், 17 நாட்களுக்கு முன்னதாகவே வெளியிடப்பட்டுஉள்ளது.

இதை, மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா பாராட்டி உள்ளார்.

No comments:

Post a Comment