முதல்வரின் ‘‘காலை உணவு திட்டம்’’ தமிழ்நாடு முழுவதும் இன்று முதல் அமலுக்கு வந்தது. இதன் மூலம் அரசுப் பள்ளிகளில் பயிலும் 1 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் பயன்பெறுவார்கள். தமிழகத்தில் அரசு பள்ளியில் பயிலும் 1 முதல் 5 வகுப்பு வரையிலான மாணவ - மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி அளிக்கும் வகையில் ‘‘முதல்வரின் காலை உணவு திட்டத்தை’’, தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்தாண்டு ஜூலை மாதம் 27ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி, மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி மற்றும் மலைப்பகுதிகளில் உள்ள 1,545 அரசு தொடக்கப்பள்ளிகளில் 1 லட்சத்து 14 ஆயிரத்து 95 மாணவர்கள் பயன்பெறும் வகையில் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வந்தது. இத்திட்டத்திற்கு பலர் வரவேற்பையும், பாராட்டையும் தெரிவித்தனர்.
இதன் காரணமாக சமீபத்தில் நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் 2023-24ம் நிதியாண்டில் இருந்து ‘‘முதல்வரின் காலை உணவுத்திட்டம்’’ விரிவாக்கம் செய்யப்படுவதாக அறிவித்தார். அதன்படி, நகர்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 433 நடுநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் பயிலும் 56,098 மாணவ - மாணவியர் பயன்பெறும் வகையில் முதல்வரின் ‘‘காலை உணவு திட்டம்’’ விரிவாக்கத் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார்.
No comments:
Post a Comment