JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி
மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கான ஆய்வுக் கூட்டம், சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலககட்டிட கூட்டரங்கில் வரும் 28-ம் தேதி காலை 9 மணிக்கு நடைபெற உள்ளது.
இக்கூட்டத்தில் மடிக்கணினியுடன் பங்கேற்குமாறு அனைத்து கல்வி அதிகாரிகளுக்கும் பள்ளிக்கல்வி ஆணையர் க.நந்தகுமார் தகவல் அனுப்பியுள்ளார்.
இந்த ஆய்வுக் கூட்டத்தில் பள்ளிக்கல்வித் துறையின் செயல்பாடுகள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் நலத்திட்ட உதவிகள், அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க எடுக்க வேண்டிய முயற்சிகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட இருப்பதாக பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment