Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Wednesday, April 26, 2023

மஞ்சளுடன் மிளகு சேர்த்து கொதிக்க வச்சி குடிச்சா ,இத்தனை நோயை மிதிக்கலாமா ?


பொதுவாக கொரானா காலத்தில் நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்த்திக்காக பல்வேறு விதமான மூலிகை பொருட்களை சாப்பிட்டு வந்தோம் ,அதில் நிறைய பேர் பலனை அடைந்தார்கள் .பலருக்கு இந்த நோய் தொற்று இல்லாமல் தப்பித்து வந்தனர் .அதிலும் மஞ்சள் மற்றும் மிளகு நம் உடலில் பல்வேறு நோய்கள் வராமல் காக்கிறது .இந்த இரண்டு பொருட்களை கொண்டு தயாரிக்கப்படும் கஷாயம் மூலம் நம் உடல் பெரும் நன்மைகள் பற்றி இந்த பதிவில்பார்க்கலாம்



1.முதலில் ஒரு கிளாஸ் நீரை சூடாக்கி கொதிக்க வைத்து கொள்ளவும் .

2.அதன் பிறகு அந்த கொதிக்கும் நீரில் , அரை டீஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் 5 கருப்பு மிளகு சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும்.

3.அதன் பிறகுஅந்த கலவையை வடிகட்டி, அதில் தேன் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து குடிக்கவும்.

4.தினமும் காலையில் வெறும் வயிற்றில் மஞ்சள்- கருப்பு மிளகுத் தண்ணீரைக் குடிப்பது உங்கள் உடலில் வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து ஆரோக்கியம் தரும் .

5.இந்த மூலிகை தண்ணீரை குடிப்பதால் உடல் எடையை எளிதில் குறைகிறது.

6.இந்த மூலிகை தண்ணீர் கலவையானது புற்றுநோய் அபாயத்திலிருந்து நம்மை பாதுகாக்கும்.

7.தினமும் வெறும் வயிற்றில் இந்த மூலிகை தண்ணீரை குடித்து வந்தால் மூட்டு வலி குணமாகும்

8.இந்த மூலிகை தண்ணீர் மூலம் வீக்கத்தில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

9. தினமும் காலையில் வெறும் வயிற்றில்இந்த மஞ்சள் மற்றும் தண்ணீரைக் குடிப்பதால், இரத்தத்தில் உள்ள குளுக்கோஸின் அளவு குறைந்து சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்

10.இதன் மூலம் கணையத்தில் இன்சுலின் உற்பத்தி அதிகரிக்கிறது. இதனுடன், இன்சுலின் உணர்திறனை மேம்படுத்துகிறது.

11.சிலருக்கு சளி இருமல் இருக்கும் .காலையில் வெறும் வயிற்றில் மஞ்சள் மற்றும் கருமிளகு கலந்த தண்ணீரைக் குடிப்பதால் சளி மற்றும் இருமல் மாயமாய் மறைந்து விடும்

12.இந்த கொரானா தொற்று நோய் காலத்தில் இம்முனிட்டி பவர் நமக்கு தேவை .தினமும் காலையில் வெறும் வயிற்றில் மஞ்சள் மற்றும் கருமிளகு கலந்த நீரைக் குடிப்பதால் தொற்று நோய்களின் அபாயம் இல்லை

No comments:

Post a Comment