JOIN OUR THAMIZHKADAL TECH SOCIAL MEDIAS





Wednesday, April 26, 2023

பள்ளி கல்லூரி போல அங்கன்வாடி மையங்களுக்கும் விடுமுறை வேண்டும் - தொடர் போராட்டம்

பள்ளி கல்லூரிகளுக்கு ஒரு மாதம் கோடை விடுமுறை விடுவது போல அங்கன்வாடி மையங்களுக்கும் ஒரு மாத காலம் விடுமுறை வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 200க்கும் மேற்பட்ட அங்கன் ஊழியர்கள் தெரடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

10 ஆண்டுகள் பணி முடித்துள்ள அங்கன்வாடி உதவியாளர்களுக்கு எந்தவித நிபந்தனையும் இன்றி உடனடியாக பதவி உயர்வு வழங்க வேண்டும். 10 குழந்தைகளுக்கு குறைவாக உள்ள பிரதான மையங்களை மினி மையங்கள் ஆக்குவதையும், ஐந்து குழந்தைகளுக்கு குறைவாக உள்ள பிரதான மையங்களோடு இணைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும். 

பள்ளி, கல்லூரிகளுக்கு கோடைவிடுமுறை விடுவதுபோல, அங்கன்வாடி மையங்களுக்கும் ஒரு மாதம் விடுமுறை வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தினர் தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் 200க்கும் மேற்பட்ட அங்கன்வாடி ஊழியர்கள் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினார்கள்.

No comments:

Post a Comment