Thursday, April 20, 2023

குருவின் அருளால் தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றம் பெரும் ராசிகள்!

சோபகிருது வருடம் சுசித்திரை மாதம் 9 ஆம் தேதி (ஏப்ரல் 22, 2023) சனிக்கிழமை அன்று இரவு 11.24 மணிக்கு அசுவதி நட்சத்திரம் 1 ஆம் பாதத்தில் மேஷராசியில் குரு பகவான் சஞ்சரிக்கின்றார்.

குரு பகவானின் பார்வை சிம்மம், துலாம், தனுசு ஆகிய ராசிகளில் நேரடியாக விழுகிறது. 'குரு பார்க்க கோடி நன்மை' என்பார்கள். அந்த வார்த்தையை போல குரு பகவான் தன் பார்வைபலத்தால் மக்களுக்கு நற்பலன்களை வழங்குவார்.


மேஷம் : நவக்கிரகங்களில் சுபகிரகமாக விளங்குபவர் குரு பகவான். அவர் உங்கள் ராசிக்கு 9, 12 ஆகிய இடங்க ளுக்கு அதிபதியானவர். பாக்கிய ஸ்தானம் மற்றும் விரய ஸ்தானத்திற்கு அதிபதியானவர், ஜென்மத்திற்கு வருவதால் விரயங்கள் கூடுதலாகத்தான் இருக்கும். வீண் விரயங்களை தடுக்க சப விரயங்களை மேற்கொள்வது நல்லது. ஜென்மத்தில்குரு வரும் பொழுது நீங்கள் சிக்கனத்தைக் கடைப்பிடிக்க இயலாது. அதே நேரத்தில் செலவுகள் அதிகரிக்கின்றதே என்றுகவலைப் படவும் வேண்டாம். செலவிற்கேற்ற விதத்தில் வரவு முன்னதாகவே வந்துவிடும். பூர்வீக சொத்துக்களை விற்று விட்டுப் புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சி கைகூடும். வெளிநாட்டு வணிகத்தால் ஆதாயம் கிடைக் கும். ஆரோக்கியத்தில் மட்டும் கவனம் தேவை.

ரிஷபம் : ஆண்டுக்கு ஒருமுறை பெயர்ச்சியாகி அனைத்து வளங்களையும் தரும் குரு பகவான் உங்கள் ராசிக்கு 8, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர். உங்கள் ராசிநாதன் சுக்ரனுக்கு குரு பகவான் பகை கிரகமாவார். எதிரியாக இருந்தாலும் எதிரில் வரும்பொழுது கும்பிட்டால், உதறித் தள்ளாமல் ஒன்று சேர்ந்து வாழ வழிவகுப்பவர் குரு பகவான். அந்த குரு பகவான் 8 ஆம் இடத்திற்கு அதிபதியாகி 12-யில் வரும் பொழுது 'கெட்டவன் கெட்டில் கிட்டிடும் ராஜயோகம்' என்பதற்கு ஏற்ப வெற்றிக் கனியை எட்டிப்பிடிப்பீர்கள். விரய ஸ்தானத்தில் குரு வரும் பொழுது விரயங்கள் அதிகரிக்கலாம். எனவே, சுபவிர யங்களாக மாற்றிக் கொள்ளுங்கள். உடல்நலத்தில் சிறு சிறு தொல்லைகள் வந்தாலும் உடனுக்குடன் மருத்துவ ஆலோசனைபெற வேண்டும்.

மிதுனம் : மகத்துவம் வாய்ந்த குரு பகவான் நவக்கிரகங்களில் நல்ல விதமான பார்வையைக் கொடுப்பார் என்று போற்றப்படுவார். அவர் உங்கள் ராசிக்கு 7, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர். தொழில் ஸ்தானத்திற்கு அதிபதியான குரு, லாப ஸ்தானத்திற்கு இப்போது வரும் இந்த நேரம் பொருளாதாரத் தில் மிகப்பெரிய வளர்ச்சி ஏற்படும். அந்த அடிப்படையில் லாப ஸ்தானத்திற்கு குரு வரும் பொழுதுபணவரவுதிருப்தி தரும். மதிப்பும், மரியாதையும் உயரும். அடிப்படை வசதிகளைப் பெருக்கிக் கொள்வீர்கள். தொழிலில் புதிய முதலீடுகள் செய்து இழந்த செல்வத்தை மீண்டும் பெறுவதற்கான வாய்ப்பு அதிகம். பிள்ளைகளால் ஏற்பட்ட பிரச்சினைகள் அகலும். பெண் குழந்தைகளின் திருமணங்கள் சிறப்பாக நடைபெற வழிபிறக்கும். பொதுவாழ்வில் புதிய திருப்பங்கள் ஏற்படும். இது உங்களுக்கு சாதகமான காலம் என்பதால், சுறு சுறுப்பாக செயல்பட்டு முன்னேறுவது நல்லது.

கடகம் : குரு பகவான் உங்கள் ராசிக்கு 6, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர். அவர் இப்பொழுது 10 ஆம் இடத்திற்கு வருகின்றார். எனவே பணிபுரியும் இடத்தில் பதற்றங்கள் கூடாது. எதிர்மறை சிந்தனைகளைத் தவிர்த்து நேர்மறை சிந்தனைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும். உங்களுக்கு கொடுக்கப்பட்ட பொறுப்புகளில் திடீர் திடீரென மாற்றம் வரலாம். ஆடம்பரச் செலவுகளால் சேமிப்பு கரையும். தொழில் புரிபவர்களுக்கு பணியாளர்களால் தொல்லை உண்டு.

சிம்மம் : குரு பகவான் உங்கள்ராசிக்கு 5,8 ஆகிய இடங்களுக்கு அதிப தியானவர். பூர்வ, புண்ணிய ஸ்தானத்திற்கு அதிபதியான குரு பகவான் இப்பொழுது பாக் கிய ஸ்தானத்திற்கு வருகின் றார். நினைத்ததெல்லாம் நிறை வேறும் விதத்தில் சாதகமான பலன்களை அள்ளி வழங்கப் போகின்றார். அலுவலகத்தில் உற்சாகத்தோடு பணிபுரிவீர்கள். சக ஊழியர்களின் ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். கடன் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர்கள். இதுவரை ஏற்பட்ட பிரச்சினைகள் ஒவ்வொன்றாக அகலும். மோதல்கள் நிறைந்த வாழ்க்கையில் முத்தான பலன்கள் இனி கிடைக்கும். சாதனையாளர்கள் பட்டியலில் உங்கள் பெயரும் இடம் பெறலாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு ஊதிய உயர்வு, பதவி உயர்வு போன்ற இன்ப அதிர்ச்சிகள் ஏராளமாக ஏற்படும்.

கன்னி : நவக்கிரகங்களில் சுபகிரகமாக விளங்கும் குரு பகவான் உங்கள் ராசிக்கு 4, 7 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர். அவர் இப்பொழுது எட்டாம் இடத்திற்கு வருகின்றார். அஷ்டமத்தில் குரு அடியெடுத்து வைப்பது அவ்வளவு நல்லதல்ல. ஆரோக்கியத் தொல்லை அதிகரிக்கும். அதே சமயம், அதிக விரயங்களையும் சந்திக்க நேரிடும். மருத்துவச் செலவு மற்றும் மனக்கவலை உருவாகும். சிக்கனத்தைக் கையாண்டு, செலவுகளை குறைத்துக் கொள்வதன் மூலம் தக்க பலன் உங்களுக்கு கிடைக்கும். குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கலாம். தொழில் வியாபாரத்தில் மிகுந்த கவனத்தோடு இருப்பது நல்லது. உத்தியோகத்தில் வரும் இடமாற்றம், உள்ளத்தை நெருட வைக்கும். மதிப்பையும், மரியாதையையும், தக்க வைத்துக் கொள்ள இயலாது.

No comments:

Post a Comment

Featured News

தமிழ்க்கடல்

Labels

1-5 10 வகுப்பு 10TH ENGLISH 10TH MATHS 10TH SCIENCE 10TH SOCIAL SCIENCE 10TH TAMIL 11வகுப்பு 12 வகுப்பு 6-9 வகுப்புகள் 8TH ENGLISH 8TH MATHS 8TH SCIENCE 8TH SOCIAL SCIENCE 8TH TAMIL 9 வகுப்பு AADHAAR ADMISSION Android Apps Annual Planner ANSWER KEY Audio B.Ed M.Ed BANK BE BEO BOOKS BULLETIN CBSE BOOKS CBSE EXAMS CBSE NEWS CCE CEO செயல்முறைகள் Certificate CM CELL CM LETTER COLLEGE LINKS COMPLETE MATERIALS COMPUTER Contact Numbers COURT ORDER CPS CRC CSAT CSIR CTET Current Affairs D A DEO செயல்முறைகள் DEPARTMENTAL EXAM DUPLICATE E - LEARN ELECTION NEWS EMIS Ennum Ezhuthum EQUIVALENCE EXAMS FEES PAYMENT FONTS Forms G K G.Os GATE GAZETTE GENUINENESS go GPF HALL TICKET Hand Book HI TECH LAB HISTORY GK HOLIDAY ICT IFHRMS IMPORTANT LINKS INCENTIVE INCOME TAX INCREMENT INSPIRE AWARD ITK JEE Kalvi Tv Videos LAB ASSISTANT LESSON PLAN MAGAZINE NAS NEET NET NEWS NHIS NMMS ONLINE CLASS ONLINE LINKS ONLINE TEST OTHER BOOKS PAY ORDER PERMISSION PINDICS POLICE POSTAL PSTM PTA QR CODE VIDEOS R H LIST RAILWAY REGULARISATION ORDER RESULT RMSA RRB RTE RTI LETTERS SAFETY AND SECURITY SCHOLARSHIP SCHOOL CALENDAR School Children Movie SCHOOL DIARY SET SHAALA SIDDHI SLAS SMC SOFTWARE SOFTWER SSC TAMIL MP3 SONGS TET TEXT BOOK TIME TABLE TNEB TNPSC TNSED Tr TRAINING TRANSFER TRB TRB-TET-NET UDISE UPSC VACANCY LIST Vanavil Mandram VAO VIDEO VIDEO STORIES WORK SHEET YEAR BOOKS அகராதி நூல்கள் அக்கு பஞ்சர் அரசிதழ் வெளியீடு அரியது அறிவியியல் ஆணையர் செயல்முறைகள் ஆய்வுகள் ஆன்மீகம் இயக்குநர் செயல்முறைகள் இயற்கைவேளாண்மை இலக்கணம் இலக்கியம் உடல்நலம் உதவித்தொகை உள்ளூர் விடுமுறை ஊதிய உயர்வு எழுத்தறிவுத் திட்டம் ஓய்வூதியம் கட்டுரை கதைகள் கலந்தாய்வு கல்வி உளவியல் கல்விச்செய்திகள் கவிதை கற்றல் விளைவுகள் கனவு ஆசிரியர் காலை உணவு திட்டம் காலை வழிபாடு சட்டம் சிறப்புச் செய்திகள் சிற்றிதழ் தமிழக பட்ஜெட் தமிழ் இலக்கிய வரலாறு தமிழ் நூல்கள் திருக்குறள் திறனாய்தேர்வுகள் தினம் ஒரு திருக்குறள் தேர்வு தொலைபேசி எண்கள் தொழில்நுட்பச் செய்திகள் நம்பிக்கை நான் முதல்வன் நீதிக் கதைகள் நீதிமன்றம் உத்தரவு பணிவரன் முறை பணிவரன் முறை ஆணை பதவி உயர்வு பலகாரம் பள்ளி பார்வை புவிசார் குறியீடு பொதுச் செய்திகள் மத விடுப்பு மருத்துவம் மன்றங்கள் மொழித் தேர்வு யோகா யோகாசனம் ராசி பலன்கள் வரலாற்றில் இன்று வரலாற்றுத் தகவல்கள் வாழ்க்கை வரலாறு வாழ்த்துத் செய்தி வானவில் மன்றம் வாஸ்து சாஸ்திரம் விண்ணப்பிக்க வேலைவாய்ப்புச்செய்திகள் ஜாக்டோ ஜியோ ஜோதிடம்