Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Friday, May 26, 2023

1 முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள பள்ளி மாணவர்களுக்கு ஜூன் 7ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் - அமைச்சர் அன்பில் மகேஷ்

கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் பள்ளிகள் திறப்பை ஒத்திவைக்க வேண்டும் என பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கைகள் வைக்கப்பட்டன. 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை ஜூன் ஒன்றாம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.

ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை ஜூன் ஐந்தாம் தேதி பள்ளிகள் தமிழகத்தில் திறக்கப்படும் என ஏற்கனவே பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இந்த நிலையில் இதுவரை இல்லாத அளவுக்கு தமிழ்நாடு முழுவதும் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது.

எனவே மாணவர்களின் நலன்கருதி பள்ளிகள் திறப்பை தள்ளி வைக்க வேண்டும் என்று அரசியல் தலைவர்கள் உள்ளிட்டோர் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில், பள்ளிகள் திறப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஒன்று முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் ஜூன் 7ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்துள்ளார்.

மேலும் விடுமுறையை ஈடு செய்யும் வகையில் ஒரேடியாக வகுப்புகள் நடத்தாமல், மாதத்தில் ஒரு சனிக்கிழமை அல்லது இரண்டு சனிக்கிழமை வீதம் வகுப்புகள் நடத்தப்பட்டு நாட்கள் ஈடு செய்யப்படும்” என தெரிவித்தார்.

No comments:

Post a Comment