Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Monday, May 29, 2023

எப்பேர்பட்ட சளியும் அடித்துக் கொண்டு வெளியேறும்!! 1 வேளை மட்டும் குடியுங்கள்!!


நமக்கு திடீர் என்று ஏற்படும் சளி, இருமல் நோய்த் தொற்றை எளிமையான முறையில் எவ்வாறு குணப்படுத்துவது என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

நமக்கு ஏற்படும் சளி, இருமல் நோய்த் தொற்றுகளை குணப்படுத்த ஒரு சிறப்பான கஷாயம் ஒன்றை தயார் செய்து குணப்படுத்தவுள்ளோம். அந்த கஷாயம் செய்ய தேவையான பொருள்கள் என்ன, எவ்வாறு இதை தயார் செய்வது என்று பார்க்கலாம்.

கஷாயத்தை செய்ய தேவையான பொருட்கள்.

* திப்பிலி

* ஓமவல்லி இலை

* வெற்றிலை

* சீரகம்

* மஞ்சள் தூள்

* பனங்கற்கண்டு

* மிளகு

* மல்லி

* துளசி

தயார் செய்யும் முறை.

அடுப்பை பற்ற வைத்து பாத்திரம் வைத்து 500 மிலி அளவு தண்ணீர் சேர்த்துக் கொள்ள வேண்டும். பிறகு இதில் தேவையான பொருள்கள் அனைத்தையும் சேர்த்து இதமான தீயில் கொதிக்க வைக்க வேண்டும். எடுத்துள்ள 500 மிலி தண்ணீரானது 250 மிலி தண்ணீர் ஆகும் வரை நன்கு கொதிக்க வைக்க வேண்டும். நன்கு கொத்தித்த பிறகு இதை இறக்கு ஆற வைக்க வேண்டும்.

சூடு குறைந்த பிறகு இதை எடுத்து வடிகட்டி குடிக்கலாம். இந்த கஷாயத்தை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினரும் குடிக்கலாம். தொடர்ந்து மூன்று நாள் இந்த கஷாயத்தை குடித்து வந்தால் சளி இருமல் சரியாகும்.

No comments:

Post a Comment