Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Saturday, May 27, 2023

வாய்ப்புண் - குரல் அடைப்பை சரி செய்யும் சுண்டைக்காய்..!

கசப்பு சுவையுடைய படரும் கொடியில் காய்க்கும் சிறு உருண்டை வடிவிலான காய்தான் சுண்டக்காய் ஆகும்.

இச்செடியானது அநேகமான இடங்களில் கிடைக்கக்கூடியது. சுண்டைக்காய் கத்தரி குடும்பத்தைச் சார்ந்த புதர்ச் செடியாகும். வீடுகளிலும், ஈரமான நிலங்களிலும் தானாகவே வளரக்கூடியது. பழங்காலத்திலிருந்தே சுண்டகாய் நாட்டு மருத்துவங்களில் பயன்படுகிறது. சுண்டக்காய் சிறிதாக இருந்தாலும் அதன் பயன்கள் அதிகமாகவே காணப்படுகின்றன.

வயிற்று பூச்சி தொலைகளுக்கு

வயிற்றுப் பூச்சிகளை அகற்றும். பொதுவாக சிறு குழந்தைகள் நுண்ணுயிர்கள் நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிடுவார்கள். இதனால் வயிற்றில் பூச்சித் தொல்லை ஏற்படும். இதைச் சரி செய்ய சுண்டக்காய் பக்குவம் செய்து சாப்பிட்டால் வயிற்றுப் பூச்சிகள் அழிந்து உடல் மற்றும் வயிறு சுத்தமாகிவிடும். உண்ணும் உணவு செரிமானம் அடைய உதவுகின்றது. உண்ணும் உணவு நன்கு செரிமானம் அடைந்தால்தான் உணவில் உள்ள சத்துக்கள் உடலுக்கு கிடைப்பதுடன் கழிவுகளும் வெளிவரும். இதற்கு சிறந்த முறையில் சுண்டக்காய் உதவுகின்றது.

வயிற்றுப்போக்கு நிவாரணம்

வயிற்றுப் போக்கை சரி செய்கிறது. வயிற்றுப்போக்கு ஏற்படும் போது சுண்டைவற்றல், நெல்லிவற்றல், வெந்தயம், ஓமம், மாதுளை ஓடு, மாம் பருப்பு, கறிவேப்பிலை, சீரகம் இவற்றைச் சம அளவில் எடுத்து காய வைத்து பின் வறுத்து இடித்து பொடியாக்கி அப்பொடியை இரண்டு சிட்டிகை அளவு ஒரு டம்ளர் மோருடன் கலந்து காலையும் மாலையும் இரண்டு நாட்கள் சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு குணமாகும். பசியுணர்வைத் தூண்டும். சுண்டக்காயைப் பக்குவம் செய்து சாப்பிட்டால் பசி உணர்வு தூண்டப்படும். உடல் ஆரோக்கியம் பெறும்.

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பு

ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும். ரத்தத்திலுள்ள கொழுப்பு இரத்தக் குழாய்களில் படிய விடாமல் செய்யும் சக்தி சுண்டக்காய்கு உண்டு. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும். வெள்ளை இரத்த அணுக்களை அதிகரித்து அதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டும். ரத்தசோகையை சீர்செய்யும். சுண்டங்காயில் உள்ள இரும்புச் சத்தானது இரத்த சோகையை எதிர்த்து போராடும்.

வளமான குரலுக்கு

சுண்டக்காயிலுள்ள ரிப்போப்ளேவின் வாய்ப் புண்ணையும், சொத்தைப் பல் உருவாவதையும் தடுக்கிறது. பார்வைத் திறனை அதிகரிக்க உதவுவதுடன், நினைவாற்றலையும் அதிகப்படுத்துகிறது. சுண்டங்காய் நரம்பு மண்டலத்திற்கு சக்தியைக் கொடுத்து இவற்றை சீராக்குகிறது. சுண்டைக்காயில் அதிகம் கால்சியம் இருப்பதால் எலும்பை உறுதியாக்கி வலுவடையச் செய்கின்றது. இதனால் வயதானவர்கள் எலும்பு உறுதி பெற இதனை உணவுடன் எடுத்துக் கொண்டால் நன்மை கிடைக்கும். காய்ச்சல் ஏற்பட்டால் அல்லது உடல் நலம் குன்றியிருந்தால் சுவை அறியும் திறன் குன்றிப் போய்விடும். இந்நேரங்களில் தினமும் சாப்பிட்டு வந்தால் நாக்கில் சுவை அறியும் திறன் அதிகமாகும். குரல் அடைப்பை சரி செய்வதற்கு சுண்டங்காய் உதவுகின்றது. ஜலதோஷம் ஏற்பட்டால் குரல் கட்டிக்கொள்ளும். இதனைச் சீர்செய்ய சுண்டைக்காயை அடிக்கடி பக்குவப்படுத்தி சாப்பிட்டு வந்தால் குரல் வளம் பெறும்.

No comments:

Post a Comment